ஊழல் புகாரில் திமுகவின் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகளைத் தமிழக வெற்றிக் கழகம் குறிவைப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதன் ஒரு பகுதியாக, தனியார் பள்ளிகள் தொடர்பான ரூ100 கோடி முறைகேடு புகாரில் திமுக நிர்வாகி அரசு குமார் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். அடுத்தடுத்து நடக்கும் இந்த கைது நடவடிக்கைகள் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
இந்த கைது நடவடிக்கை, இத்துறையை முந்தைய அரசில் கவனித்து வந்த அன்பில் மகேஸுக்குப் பெரும் நெருக்கடியைக் கொடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், செந்தில் பாலாஜி மற்றும் எ.வ. வேலு ஆகியோரும் டார்கெட்டில் உள்ளது ஸ்டாலினுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
