தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. குறிப்பாக திமுக மீண்டும் ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் பல வியூகங்களை வகுத்து வருகின்றது. என்னதான் தனது கூட்டணி பலமாக இருந்தாலும் கூட்டணிக்குள் கடந்த சில நாட்களாகவே தொகுதி பங்கீடு தொடர்பாக முரண்பாடு நிலவி வருகிறது. காங்கிரஸ் மற்றும் விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் தொகுதி பங்கீடு தொடர்பாக ஸ்டாலின் இடம் தொடர்ந்து பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருகின்றன. அவர்களிடம் ஸ்டாலின் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றார். அதேசமயம் மாற்றுக் கட்சியினரை தங்கள் கட்சியில் இணைக்கும் பணியிலும் திமுகவினர் தீவிரம் காட்டி வருகிறார்கள்.
இந்நிலையில் திமுகவின் குடும்ப அரசியலை எதிர்த்து கட்சி தொடங்கிய வைகோ மீண்டும் திமுக விலையே இணைந்தார். இவருடைய கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்த மல்லை சத்யா, வைகோவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக முதலில் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். அதன் பிறகு வைகோ மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்த மல்லை சத்யா, திராவிட வெற்றி கழகம் என்ற புதிய கட்சியை தொடங்கினார். இதனை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்வதற்கான பணியில் மும்முறமாக ஈடுபட்டுள்ள மல்லை சத்யா செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைத்தால் திராவிட வெற்றிக் கழகம் போட்டியிட தயாராக உள்ளது. அதனைப் போலவே எங்கள் தாய் கழகமான திமுகவில் இணைந்து பணியாற்றவும் தயாராக உள்ளோம் என்று கூறியுள்ளார். இதன் மூலம் இவர் திமுக கூட்டணியில் இணைவதற்கு விருப்பத்தை தெரிவித்துள்ளார் என்பது தெளிவாகியுள்ளது. இதனால் இவர் கூடிய விரைவில் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைவார் என்று தெரிகிறது. ஆனால் இவர் திமுக கூட்டணியில் சேர்ந்தால் மதிமுக திமுகவுடன் தொடருமா என்பது தற்போது கேள்விக்குறியாகியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் பலோத்ரா மாவட்டத்தின் சிவானா பகுதியைச் சேர்ந்தவர் நிதேஷ் குமார் ஜிங்கர் (32). இவருக்கும் இவருடைய மனைவி காந்தா…
வேத ஜோதிடத்தில் முழு முதற் சுப கிரகமாகப் போற்றப்படும் குரு பகவான், தற்போது தான் சஞ்சரித்து வரும் மிதுன ராசியில்…
"இன்னொரு ஆண் பிள்ளை வேண்டும்" என்ற ஆசையினால், 22 வயதே ஆன இளம் பெண் ஒருவர் தனது 8 வருட…
சத்தீஸ்கர் மாநிலம் சர்குஜா மாவட்டத்தில், 90 வயதான முதியவர் ஒருவரின் மாதாந்திர ஓய்வூதியத் தொகை ரூ.500-ஐப் பெறுவதற்காக, அவருடைய மருமகள்…
கனடாவிலிருந்து இந்தியாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், அங்குள்ள தனிமை மற்றும் மன உளைச்சல் காரணமாகத் தானாகவே முன்வந்து மீண்டும் தாய்நாட்டிற்குத்…
டெல்லியின் பரபரப்பான லஜ்பத் நகர் பகுதியில் 'கேரிமென்' (CarryMen) என்ற புதிய ஸ்டார்ட்அப் நிறுவனம் தொடங்கியுள்ள விசித்திரமான சேவை, தற்போது…