தஞ்சாவூரில் நடைபெற்ற பொது நிகழ்ச்சி ஒன்றில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் இன்னும் நடனம் ஆடாதது மட்டும்தான் குறை என்பது போல ஆளுங்கட்சியினர் பேரவையின் தரத்தையே குறைத்துவிட்டதாகக் கடுமையாக விமர்சித்துள்ளார். மேலும், முதலமைச்சர் விஜய் தன்னைத்தானே சுய பரிசோதனை என்ற பெயரில் ‘எக்ஸ்போஸ்’ செய்து கொள்ளத் தொடங்கிவிட்டார் என்றும், சட்டமன்றத்தில் ஆளுங்கட்சி உறுப்பினர்கள் அரங்கேற்றிய கூத்துக்களை ஒட்டுமொத்தப் பொதுமக்களும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள் என்றும் அவர் சாடினார்.
தொடர்ந்து பேசிய அவர், தமிழக சட்டமன்றத்தின் தற்போதைய செயல்பாடுகளைப் பார்க்கும்போது, “இது மக்கள் பிரச்சினைகளைப் பேசும் சட்டமன்றமா? அல்லது சினிமா தியேட்டரா?” என்ற மிகப்பெரிய சந்தேகமே மக்களுக்கு எழுந்துள்ளதாகக் குறிப்பிட்டார். ஆளுங்கட்சியின் இத்தகைய பொறுப்பற்ற போக்கினால் சட்டப்பேரவையின் கண்ணியமும், பாரம்பரியமும் முற்றிலும் சீர்குலைந்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது உரையில் குற்றம்சாட்டினார்.
