சவாலும் சவடாலும் விட்டவர் எப்போது மௌனம் கலைப்பார்.? மக்களின் பாதுகாப்புக்கு எப்போது ‘கால்ஷீட்’..? முதலமைச்சர் விஜயை நோக்கி ஸ்டாலின் பாய்ச்சல்..!

By Soundarya on ஆனி 16, 2026

Spread the love

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாகக் கூறி, தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை நோக்கி திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் மிகக் கடுமையான அரசியல் விமர்சனங்களை முன்வைத்துள்ளார். “சவாலும் சவடாலும் விட்டவர், எப்போது தனது அமைதியான மௌன நிலையில் இருந்து வெளியே வருவார்?” என அவர் தனது சமூக வலைதளப் பதிவில் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 12 பாலியல் குற்றங்கள் நடந்துள்ளதாக ஆங்கிலப் பத்திரிகையில் வெளியான அதிர்ச்சிகரமான செய்தியைச் சுட்டிக்காட்டி இந்த விவாதத்தை அவர் ஆரம்பித்துள்ளார்.

தேர்தல் பிரச்சாரங்களின் போதும் கட்சி மேடைகளிலும் “பெண்களின் பாதுகாப்புக்காகச் சிங்கப்பெண் படையை அமைத்துவிட்டேன்” என்று ஆவேசமாகச் சீறிய முதலமைச்சரின் காதுகளுக்குத் தற்போதைய நிலவரங்கள் எட்டவில்லையா என ஸ்டாலின் சாடியுள்ளார். தங்களது பிஞ்சு குழந்தைகளைப் பாலியல் வன்கொடுமைகளுக்குப் பலி கொடுத்துவிட்டு, கதறித் துடிக்கும் பெற்றோர்களின் அழுகுரல் இன்னும் முதலமைச்சரின் காதுகளுக்குக் கேட்கவில்லையா என்றும் அவர் மிக ஆவலாதியோடு கேள்வி எழுப்பியுள்ளார்.

   

மேலும், சினிமா பாணியில் அரசை விமர்சித்துள்ள ஸ்டாலின், “மக்களின் அத்தியாவசிய பாதுகாப்புப் பிரச்சினைகளுக்கு முதலமைச்சர் எப்போது ‘கால்ஷீட்’ கொடுப்பார்?” என அடுக்கடுக்கான வினாக்களைத் தொடுத்துள்ளார். தமிழகத்தில் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் எதிரான குற்றங்கள் அதிகரித்து வரும் வேளையில், திமுக தலைவரின் இந்த நேரடித் தாக்குதல் தவெக தலைமைக்கும் தற்போதைய அரசுக்கும் மிகப்பெரிய அரசியல் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.