மத்திய பட்ஜெட் (2026-27) வெளியான பிறகு தமிழக அரசியல் களம் மிகவும் சூடுபிடித்துள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்வைத்துள்ள இந்த விமர்சனம், தேர்தல் நெருங்கும் வேளையில் மிகப்பெரிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் நாம் எப்படியும் தோற்கப்போகிறோம் என்பது பாஜகவுக்கு முன்கூட்டியே தெரிந்துவிட்டது. அதனால் தான், தோற்கப்போகும் ஒரு மாநிலத்திற்கு எதற்கு நிதி ஒதுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தமிழகத்தைப் புறக்கணித்துள்ளனர்” என நேரடியாகவே பாஜகவைத் தாக்கியுள்ளார்.
சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டத் திட்டம், மதுரை எய்ம்ஸ் போன்ற நீண்டகால கோரிக்கைகளுக்கு இந்த பட்ஜெட்டிலும் உரிய முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என்பதே மாநில அரசின் பிரதான குற்றச்சாட்டாக உள்ளது.ஆந்திரா மற்றும் பீகார் போன்ற மாநிலங்களுக்குச் சிறப்புத் திட்டங்கள் அறிவிக்கப்படும் போது, தமிழகம் போன்ற அதிக வரி வருவாய் ஈட்டித் தரும் மாநிலம் வஞ்சிக்கப்படுவதாக திமுக தரப்பு தொடர்ந்து கூறி வருகிறது.
