தேர்தல் வந்தா மட்டும் போதுமே…! உடனே தமிழ்நாடு பக்கம் வரீங்க…! பிரதமர் மோடியை வச்சு செய்த முதல்வர் ஸ்டாலின்…!!

By Devi Ramu on தை 23, 2026

Spread the love

பிரதமர் நரேந்திர மோடியின் தமிழக வருகையை முன்னிட்டு, அவருக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும் இடையே சமூக வலைதளங்களில் கடும் மோதல்  ஏற்பட்டுள்ளது. மதுராந்தகம் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வரும் பிரதமர், “ஊழல் மிகுந்த திமுக அரசுக்குத் தமிழக மக்கள் விடை கொடுக்க முடிவு செய்துவிட்டனர்” என விமர்சித்தார்.

இதற்குப் பதிலடி கொடுத்துள்ள முதல்வர் ஸ்டாலின், தேர்தல் நேரங்களில் மட்டும் தமிழகம் வரும் பிரதமருக்குத் தமிழ்நாட்டின் நலனில் அக்கறையில்லை என்றும், பாஜக கூட்டணிக்குத் தமிழக மக்கள் மீண்டும் ஒருமுறை தோல்வியையே பரிசாகத் தருவார்கள் என்றும் ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்.

   

மேலும், தமிழகத்திற்கு வர வேண்டிய சமக்ர சிக்ஷா கல்வி நிதி மற்றும் பேரிடர் நிவாரணத் தொகையை வழங்காதது குறித்து அடுக்கடுக்கான கேள்விகளை முதல்வர் எழுப்பியுள்ளார். பின்னர் மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணி தாமதம், நீட் தேர்வு விலக்கு கோரிக்கை நிராகரிப்பு மற்றும் தொகுதி மறுவரையறை மூலம் தொகுதிகளைக் குறைக்கும் அச்சம் ஆகியவற்றுக்கு எப்போது தீர்வு கிடைக்கும்?

   

ஆளுநரின் செயல்பாடுகள் மற்றும் 100 நாள் வேலைத் திட்டப் பெயர் மாற்றம் போன்றவற்றைக் கண்டித்துள்ள முதல்வர், துரோகங்களை மட்டுமே செய்யும் பாஜகவை மக்கள் ஒருபோதும் ஏற்க மாட்டார்கள் எனத் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.