BREAKING: அடுத்த அதிரடி….. ரூ.7,500 ஆக உயர்த்தி ஸ்டாலின் அறிவித்தார்…. சூப்பர் குட் நியூஸ்…!

By Nanthini on பங்குனி 6, 2026

Spread the love

தமிழக ரேஷன் கடை விற்பனையாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, அவர்களின் ஊதியத்தை உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது, இது சுமார் 26,000 ஊழியர்களுக்குப் பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது. இதன்படி, முதல் ஓராண்டு பணிபுரியும் விற்பனையாளர்களின் தொகுப்பூதியம் ரூ.6,250-லிருந்து ரூ.7,500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

அதேபோல, ஓராண்டு பணிக்காலம் முடித்தவர்களுக்கான ஊதிய வரம்பு முன்னதாக ரூ.8,600 – ரூ.29,000 என இருந்த நிலையில், அது தற்போது ரூ.9,000 – ரூ.39,600 ஆக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. விலைவாசி உயர்வு மற்றும் பணியாளர்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு எடுக்கப்பட்டுள்ள இந்த ஊதிய உயர்வு நடவடிக்கை, அரசின் பொது விநியோகத் திட்டத்தில் பணியாற்றும் ஊழியர்களின் பணித்திறனை ஊக்குவிக்கும் என்பதில் ஐயமில்லை.