மகாராஷ்டிர மாநிலம் பீவண்டி அருகே, மும்பை-நாசிக் நெடுஞ்சாலையில் உள்ள சரவாலி கிராமத்திற்குட்பட்ட ஜியோ பெட்ரோல் பங்ககில், காரோட்டி ஒருவருக்கும் அங்கிருந்த ஊழியர்களுக்கும் இடையே சிஎன்ஜி எரிபொருளுக்கான கட்டணம் செலுத்துவதில் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதம் திடீரென முற்றி வன்முறையாக மாறியதில், பெட்ரோல் பங்க் ஊழியர்கள் காரோட்டியைச் சூழ்ந்து கொண்டு சரமாரியாகத் தாக்கியுள்ளனர்.
இத்தாக்குதல் தொடர்பான காணொளி சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. பணப் பரிவர்த்தனைப் பிரச்சனையில் காரோட்டி மீது ஊழியர்கள் நடத்திய இந்த அராஜகத் தாக்குதல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், பொதுமக்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இச்சம்பவம் தொடர்பாகக் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
