பொதுத்தேர்வு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு… இன்று ஒரு நாள் மட்டுமே கால அவகாசம்… தேர்வுத்துறை அறிவிப்பு…!

By Nanthini on தை 7, 2026

Spread the love

தமிழகத்தில் 10, 12 ஆம் வகுப்பு பொது தேர்வு எழுத விரும்பும் தனித்தேர்வர்களுக்கான விண்ணப்ப பதிவு ஜனவரி 7 இன்றுடன் நிறைவடைகிறது. பொதுத்தேர்வு எழுத விரும்பும் தனி தேர்வர்கள் இரண்டு கடவுச்சீட்டு அளவு புகைப்படம், ஆதார், பத்தாம் வகுப்பு என்றால் எட்டாம் வகுப்பு சான்றிதழ், 12 ஆம் வகுப்பு என்றால் பத்தாம் வகுப்பு சான்றிதழ் ஆகியவற்றை பயன்படுத்தி தமிழகத்தில் செயல்படும் தனித் தேர்வர்களுக்கான விண்ணப்ப பதிவு மையங்களில் பதிவு செய்து கொள்ளலாம்.

பத்தாம் வகுப்புக்கு 195 ரூபாய் கட்டணமும், 12 ஆம் வகுப்புக்கு 255 ரூபாய் கட்டணமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே இன்று ஒரு நாள் மட்டுமே கால அவகாசம் இருப்பதால் தனி தேர்வர்கள் உடனே விண்ணப்பித்து கொள்ளுமாறு அரசு அறிவுறுத்தியுள்ளது.