உயிரிழந்தவர்களின் குடும்பத்தை சேர்ந்த மாணவர்களின்… “முழு கல்விச்செலவையும் SRM குழுமம் ஏற்கும்” ஐ.ஜே.கே நிறுவனர் பாரிவேந்தர் அறிவிப்பு..!!

By Soundarya on புரட்டாதி 28, 2025

Spread the love

கரூரில் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் பரப்புரையின்போது அவரை பார்ப்பதற்காக ஏராளமான மக்கள் கூடி இருந்தனர். இந்த நிலையில் விஜய் பேசிக்கொண்டிருந்த போது கூட்ட நெரிசலில் சிக்கி பலர் மயங்கி விழுந்தனர். இந்த கோர சம்பவத்தில் 10 குழந்தைகள், 17 பெண்கள், 9 ஆண்கள் என மொத்தம் 40 பேர் உயிரிழந்தனர். 50க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  இது தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் ஐ.ஜே.கே நிறுவனர் பாரிவேந்தர் கரூர் விபத்திற்கு அனுதாபம் தெரிவித்துள்ளார். அதாவது நேற்று கரூரில் நடைபெற்ற துரதிஷ்டவசமான சம்பவம் மிகுந்த கவலை அளிக்கிறது. உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு என் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன். உயிரிழந்தவர்களின்  குடும்பத்தைச் சேர்ந்த பள்ளி மற்றும் கல்லூரி படிக்கும் மாணவர்களின் முழு கல்விச்செலவையும் எஸ்ஆர்எம் கல்விக் குழுமம் ஏற்கும். அவர்கள் தற்போது படிக்கும் கல்வி நிறுவனங்களுக்கு அவர்களின் கல்வி கட்டணம் செலுத்தப்படும். காயமடைந்த அனைவரும் நலம் பெற பிரார்த்திக்கிறேன்” என்று கூறியுள்ளார்.