Categories: சினிமா

சினிமாவில் எந்த நடிகையும் செய்யாததை செய்த நடிகை ஸ்ரீவித்யா.. நினைத்தாலே கண் கலங்குது..!!

Spread the love

பிரபல நகைச்சுவை நடிகரான கிருஷ்ணமூர்த்தி, கர்நாடக இசை பாடகி எம்.எல் வசந்தகுமாரி ஆகியோரின் மகள் நடிகை ஸ்ரீவித்யா. ஒரு விபத்தில் கிருஷ்ணமூர்த்தியின் உடல்நலம் பாதிக்கப்பட்டதால் குடும்ப பொறுப்புகளை வசந்தகுமாரி தான் பார்த்து வந்தார். பொருளாதார நெருக்கடி காரணமாக 14 வயது இருக்கும்போதே ஸ்ரீவித்யா சினிமாவிற்குள் நுழைந்தார். முதன்முதலாக நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த திருவருட்செல்வன் திரைப்படத்தின் மூலம் திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். அதன் பிறகு பெத்த ராஷி பெத்தம்மா என்ற திரைப்படம் மூலம் தெலுங்கு சினிமாவிலும் என்ட்ரி கொடுத்தார்.

இவரது திறமைக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் குவிந்தது. இயக்குனர் தாசரி நாராயணன் ஊக்கம் கொடுத்ததால் பல்வேறு திரைப்படங்களில் ஸ்ரீவித்யா நடித்த கே.பாலச்சந்தர் இயக்கத்தில் உருவான அபூர்வ ராகங்கள் திரைப்படத்தில் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் உடன் இணைந்து ஸ்ரீவித்யா நடித்தார். அந்த படம் சூப்பர் ஹிட் ஆனது. தெலுங்கிலும் ரீமிக்ஸ் செய்யப்பட்டது. தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு மொழியிலும் ஸ்ரீவித்யா முன்னணி கதாநாயகியாக வலம் வந்தார்.

கமல்ஹாசனும் ஸ்ரீவித்யாவும் ஒருவரை ஒருவர் காதலித்தனர். ஆனால் திருமணத்திற்கு ஸ்ரீவித்யாவின் தாய் ஒப்புக்கொள்ளாததால் இருவரும் காதலை முறித்துக் கொண்டனர். கடந்த 1978 ஆம் ஆண்டு இயக்குனர் ஜார்ஜ் தாமஸ் என்பவரை ஸ்ரீவித்யா திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு தனது கணவரின் விருப்பத்திற்கு ஏற்ப சினிமாவிலிருந்து விலகினார். ஆனால் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதால் மீண்டும் ஸ்ரீவித்யா சினிமாவிற்குள் நுழைந்தார். அவரது கணவர் ஸ்ரீவித்யாவின் சொத்துக்களை அபகரித்ததாக தெரிகிறது.

கடந்த 19 80 ஆம் ஆண்டு ஸ்ரீவித்யா விவாகரத்து பெற்ற கணவரை விட்டு பிரிந்தார். இதனை தொடர்ந்து சினிமாவில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் ஸ்ரீவித்யா நடித்தார். எதிர்பாராதவிதமாக 2003 ஆம் ஆண்டு ஸ்ரீவித்யாவின் உடல் நலம் பாதிக்கப்பட்டது. புற்றுநோயால் அவதிப்பட்ட ஸ்ரீவித்யா தனது கோடிக்கணக்கான சொத்துக்களை இசை மற்றும் நடன கல்லூரியில் படிக்கும் ஏழை எளிய மாணவர்களுக்கு உதவி தொகையாக வழங்க நினைத்தார். அதன் பிறகு நடிகர் கணேசன் உதவியுடன் அறக்கட்டளை ஒன்றை நிறுவி தகுதியானவர்களுக்கு உதவிகள் செய்தார். பின்னர் 2006 ஆம் ஆண்டு 53 வயதில் உயிரிழந்தார்.

admin

Recent Posts

“லைக்ஸுக்காக இப்படியா?… வந்தே பாரத் கழிவறையில் பாம்பா?… பதறிய ஊழியர்கள்!.. இறுதியில் காத்திருந்த ட்விஸ்ட்… பயணிகளை அலறவிட்ட வீடியோ”…!!!

வந்தே பாரத் ரயிலின் கழிவறையில் பாம்பு இருப்பதாகப் பயணி ஒருவர் செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கப்பட்ட போலிப் புகைப்படத்தைக்…

14 minutes ago

பிறந்தநாள் கொண்டாட வந்த இடத்தில்… மருமகனுக்கு மதுவில் விஷம் கலந்த மாமனார்.., 4 மாதங்களுக்குப் பின் அம்பலமான பகீர் உண்மை..!!

உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில், தனது மகளின் பிறந்தநாளைக் கொண்டாட வந்த மருமகனுக்கு, மாமனாரே விஷம் வைத்துக் கொலை செய்துள்ள…

27 minutes ago

“தோனியின் சாதனையை முறியடிப்பதே என் லட்சியம்… 5 கோப்பைகள் தான் டார்கெட்!”… ஐபிஎல் களத்தில் அதிரடி கிளப்பும் கே.எல். ராகுல்…!!!

2026 ஐ.பி.எல். சீசனில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்காக விளையாடி வரும் கே.எல். ராகுல், ஐ.பி.எல். வரலாற்றில் அதிக ரன்கள் குவித்தவர்கள்…

32 minutes ago

என்னடா இது..? 5.3 லிட்டர் டேங்கில் 6 லிட்டர் பெட்ரோலா..? பெட்ரோல் பங்கில் அம்பலமான பகீர் மோசடி… ஊழியரை ஓட ஓட விட்ட இளம்பெண்..!!

பெட்ரோல் பங்குகளில் நடக்கும் மோசடிகளை ஒரு இளம்பெண் தனது சமயோசித புத்தியால் அம்பலப்படுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்தப்…

40 minutes ago

“காப்பாற்ற வேண்டிய போலீஸே இப்படியா?” – பெசன்ட் நகர் கடற்கரையில் கல்லூரி மாணவிக்கு நேர்ந்த கொடூரம்… அதிர்ந்துபோன சென்னை…!

சென்னை பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையில் தனது ஆண் நண்பருடன் பேசிக்கொண்டிருந்த கல்லூரி மாணவிக்கு, பாதுகாப்பு அளிக்க வேண்டிய காவலராலேயே…

47 minutes ago

“பேச்சுவார்த்தை தோல்வி.. இனி ஆட்டம் வேற மாதிரி”… இஸ்ரேலில் 6500 டன் ஆயுதங்களை குவித்த அமெரிக்கா.. நடுங்கும் ஈரான்…!

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான மோதல் போக்கு தற்போது புதிய உச்சத்தை எட்டியுள்ளது. ஹார்முஸ் ஜலசந்தி மற்றும் ஈரானிய கடற்படையை…

55 minutes ago