தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக கொடி கட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய். இவருடைய நடிப்பில் கடந்த ஆண்டு லியோ திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் கடந்த செப்டம்பர் 5ஆம் தேதி விஜய் நடிப்பில் கோட் திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த திரைப்படத்தில் விஜய்யுடன் பிரபுதேவா, சினேகா, பிரசாந்த், லைலா உள்ளிட்டா பிரபலங்கள் பலரும் நடித்திருந்தனர். அதுமட்டுமல்லாமல் திரிஷாவும் ஒரு பாடலுக்கு நடனமாடி கலக்கியிருந்தார். இந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக தளபதி 69 திரைப்படத்தில் விஜய் நடிக்க உள்ளார்.
ஹெச். வினோத் இயக்கும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. இந்த நிலையில் விஜய் குறித்து ஒரு youtube சேனலுக்கு அளித்த பேட்டியில் பேசிய பிரபல நடிகர் எம் எஸ் பாஸ்கர், தம்பி விஜய் அமைதியாக இருப்பது நல்லது தான். அவர் அதிகம் பேச மாட்டார். அவர் என்ன பேச வேண்டும் என கேட்கிறேன். என்னை போன்றவர்களை பார்த்தால் வாங்க அண்ணா நல்லா இருக்கீங்களா சாப்டீங்களா என்று விசாரிப்பார். மற்றபடி அவர் வேலையில் அவர் சரியாக இருப்பார். நிறைய பேசினால் தலை மேல ஏறி கொள்வார்கள்.
இது பொதுவான விஷயம்தான். அதனால் தான் அவர் யாரிடமும் அதிகமாக பேசுவதில்லை. அப்படி பேசினால் அடுத்த படத்தில் எனக்கு ஒரு கேரக்டர் வாங்கி கொடு என்பார்கள். உடனே சரி என்று பொய் சொல்ல வேண்டி இருக்கும். இது போன்ற சூழ்நிலைகளை தவிர்க்க தான் விஜய் யாரிடமும் அதிகமாக பேசுவதில்லை. அழகிய தமிழ் மகன் படப்பிடிப்பில் கூட எங்களுடன் நெருக்கமாக இருந்த அவர் ஒரு சில வார்த்தைகள் மட்டுமே பேசினார் என்று எம் எஸ் பாஸ்கர் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர், நாளை தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ள நிலையில் தனது தொகுதியில் முகாமிட்டுள்ளார்.…
தெலங்கானா மாநிலம் சிவன்னகுடா பகுதியைச் சேர்ந்த நரசிம்ஹ (60) என்பவர், வேலை நிமித்தமாக ஹைதராபாத்திற்கு இடம்பெயர்ந்து கூலித்தொழில் செய்து வந்தார்.…
திரிபுராவில் 16 வயது சிறுமியை அவரது தாத்தாவே பலமுறை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்துள்ள நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்…
லக்னோவைச் சேர்ந்த உபேந்திர குப்தாவின் மகள்கள், ஐஏஎஸ் (IAS) மற்றும் சிபிஐ (CBI) போன்ற மிகக்கடினமான தேர்வுகளில் வெற்றி பெற…
தண்ணீரில் குழந்தை ஒன்று அசைவற்று மிதப்பதைக் கண்ட பொதுமக்கள், ஏதோ விபரீதம் நடந்துவிட்டதோ என்ற அச்சத்தில் பீதியடைந்தனர். பதற்றத்துடன் அருகில்…
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில், செல்போனுக்கு ரீசார்ஜ் செய்ய காதலன் மறுத்ததால் ஆத்திரமடைந்த இளம்பெண் ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம்…