பிரபல ஹீரோவை ரகசியமாக திருமணம் செய்த ஸ்ரீதேவி.. அவர் ஏற்கனவே கல்யாணமானவராம்..!!

By admin on ஆவணி 13, 2024

Spread the love

சினிமாவில் முன்னணி நடிகர்களுடன் நடித்து கொடிகட்டி பறந்தவர் நடிகை ஸ்ரீதேவி. கடந்த 1969-ஆம் ஆண்டு ரிலீசான துணைவன் என்ற திரைப்படத்தில் ஸ்ரீதேவி குழந்தை நட்சத்திரமாக முருகன் வேடத்தில் அறிமுகமானார். கடந்த 1976-ஆம் ஆண்டு கே.பாலச்சந்தரின் மூன்று முடிச்சு திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக தனது பயணத்தை ஆரம்பித்தார். முன்னணி நடிகர்களான கமல்ஹாசன், ரஜினிகாந்த் உள்ளிட்டோருடன் இணைந்து ஸ்ரீதேவி பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.

actress Sridevi

   

தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் நடித்து அந்த காலத்திலேயே பான் இந்தியா நடிகையாக வலம் வந்தார். கடந்த 1996-ஆம் ஆண்டு ஹிந்தி திரைப்பட தயாரிப்பாளரான போனி கபூரை ஸ்ரீதேவி திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு ஜான்வி மற்றும் குஷி என்ற இரண்டு மகள்கள் இருக்கின்றனர். இந்த நிலையில் போனி கபூரை திருமணம் செய்து கொள்வதற்கு முன்னரே பிரபல நடிகரை ஸ்ரீதேவி ரகசியமாக திருமணம் செய்து கொண்டதாக இணையத்தில் செய்திகள் உலா வருகிறது.

   

 

பாலிவுட்டில் சாக்லேட் பாயாக வலம் வந்த நடிகர் மிதுன் சக்கரவர்த்தி. அவரை நடிகை ஸ்ரீதேவி ரகசியமாக காதலித்து திருமணம் செய்து கொண்டதாக செய்திகள் வருகிறது. இருவரும் காதலை வெளிகாட்டியதே இல்லையாம்m ஏனென்றால் மிதுன் சக்ரவர்த்தி ஏற்கனவே யோகிதா என்ற பெண்ணை திருமணம் செய்துள்ளார். திருமணம் ஆனதால் ஸ்ரீதேவியுடன் மிதுன் சக்கரவர்த்தி ரகசிய உறவில் இருந்ததாகவும் கடந்த 1985-ஆம் ஆண்டு யாருக்கும் தெரியாமல் திருமணம் செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.

Sridevi Mithun Chakraborty married secretly, know what was actors wife  reaction | Sridevi Mithun Chakraborty: मिथुन चक्रवर्ती ने कर ली थी श्रीदेवी  से शादी, जब एक्टर की वाइफ को पता चली यह

அந்த சமயத்தில் மிதுன் சக்கரவர்த்தியின் முதல் மனைவி யோகிதா தற்கொலைக்கு முயன்றாராம். ஒருமுறை பத்திரிக்கையாளர் சந்திப்பில் அது பற்றிய கேள்விக்கு யோகிதா பதில் அளித்துள்ளார். அவர் கூறியதாவது, ஸ்ரீதேவிக்கும் மிதுன் சக்கரவர்த்திக்கும் இடையே திருமணம் நடந்ததா என்பது எனக்கு தெரியாது. ஒருவேளை அப்படி நடந்திருந்தால் தற்போது அதை ஏற்றுக் கொள்ளும் மனநிலையில் நான் இருக்கிறேன் என யோகிதா கூறியுள்ளார்.

Mithun Chakraborty's Love Life: Suspicious Nature, 2 Marriages And Annulled  Wedding With Sridevi