தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வலம் வரும் விஜய் நடிப்பில் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வெற்றியடைந்தது. இந்தப் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்தார். தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் இடம் பெற்ற மட்ட பாடல் சூப்பர் ஹிட் ஆனது.
இந்த பாடலில் திரிஷா விஜய் உடன் இணைந்து குத்தாட்டம் போட்டு இருப்பார். முதலில் தெலுங்கு நடிகையான ஸ்ரீ லீலாவை மட்ட பாடலுக்கு டான்ஸ் ஆட பட குழுவினர் அனுப்பியுள்ளனர். படத்தில் ஸ்ரீலிலா நடனம் அனைவரையும் வெகுவாக ஈர்த்தது. ஆனால் தமிழில் முதன் முதலில் அறிமுகமானால் தான் ஒரு ஹீரோயினாக தான் அறிமுகமாக வேண்டும் ஸ்ரீ லீலா உறுதியாக இருந்து விட்டாராம்.
இந்த நிலையில் இசையமைப்பாளரான அனிருத் தமிழில் ஒரு ஆல்பம் பாடலை எடுக்க போகிறாராம். அந்த பாடலில் அவரே நடிக்க போகிறாராம். அவருடன் இணைந்து ஸ்ரீ லீலாவும் அந்த பாடலில் நடிக்க போவதாக தகவல் வெளியாகி உள்ளது. அனிருத் அடுத்த படங்கள், வெளிநாட்டு கச்சேரிகள், விளம்பர படங்கள் என பிசியாகவே இருக்கிறார்.
தேவாரம் படத்தில் பிசியாக இருக்கும் அனிருத் வேட்டையன் திரைப்படத்தின் ரீமேக் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளார். அவர் ஆல்பம் சாங் எப்போது ஆரம்பிக்கப் போகிறார் என்று தெரியவில்லை. விஜயுடன் ஆட மறுத்த ஸ்ரீ லீலா அனிருத்துக்கு எப்படி சம்மதம் சொன்னார் என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்