எப்படி நீங்க திடீர்னு கேன்சல் பண்ணலாம்?… விமான நிலையத்தில் ஸ்பைஸ்ஜெட் பயணிகள் ரகளை… CISF வீரர்கள் மற்றும் ஊழியர்களை ஆபாசமாக திட்டியதால் பரபரப்பு…!

By Swetha on கார்த்திகை 7, 2026

Spread the love

பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில், ஸ்பைஸ் ஜெட் விமானம் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டதால் ஆத்திரமடைந்த பயணிகள் விமான நிலைய ஊழியர்கள் மற்றும் மத்திய தொழிற பாதுகாப்புப் படை வீரர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

விமானம் திடீரென ரத்து செய்யப்பட்டதால் 35-க்கும் மேற்பட்ட பயணிகள் நடுக்கடலில் தவிப்பது போல் பரிதவித்துப் போனார்கள். இதனால் ஆவேசமடைந்த பயணிகள் விமான நிறுவனத்தின் ஊழியர்களை முற்றுகையிட்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் தகாத வார்த்தைகளாலும் திட்டியுள்ளனர்.

   

இந்த மோதலின் போது பெண் பயணி ஒருவர் மத்திய தொழிற பாதுகாப்புப் படை வீரர்களுடனும், பெண் ஸ்பைஸ் ஜெட் ஊழியருடனும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவரை தாக்கியதாகவும் கூறப்படுகிறது. அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்தவர்கள் நிலைமையைக் கட்டுப்படுத்த முயன்ற இந்த நிகழ்வின் காணொளி தற்போது இணையத்தில் பரவி நெட்டிசன்களிடையே விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.