“நெற்றியில் குங்குமம்… பிரம்மாண்ட மாலைகள்..” செல்லப்பிராணிகள் முதல் தெருநாய்கள் வரை கௌரவிப்பு… இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

By Devi Ramu on கார்த்திகை 11, 2026

Spread the love

நேபாள நாட்டில் நாய்களின் விசுவாசத்தையும் மனிதனுடனான பிணைப்பையும் போற்றும் வகைக் கொண்டாடப்படும் ‘குக்குர் திகார்’ திருவிழாவின் புகைப்படங்களும் வீடியோக்களும் இணையத்தில் வைரலாகி மக்களின் இதயங்களை வென்று வருகிறது.

நேபாளத்தின் பாரம்பரியமான 5 நாள் தீபாவளித் திருவிழாவின் ஒரு பகுதியாகக் கொண்டாடப்படும் இரண்டாவது நாள் ‘குக்குர் திகார்’ என்று அழைக்கப்படுகிறது. இந்த நாளில் வளர்ப்பு நாய்கள் மட்டுமல்லாமல், தெருக்களில் திரியும் நாய்களும் கூட மிகுந்த மரியாதையுடன் போற்றப்படுகின்றன.

   

நாய்களுக்குச் சாமந்தி மலர்களால் ஆன பிரம்மாண்ட மாலைகள் அணிவிக்கப்பட்டு, நெற்றியில் சிவப்பு குங்குமம் அல்லது திலகம் இடப்படுகிறது. மேலும் அவற்றுக்குப் பிடித்தமான சிறப்பு உணவுகள் மற்றும் தின்பண்டங்கள் அன்போடு வழங்கப்படுகின்றன.

   

மனிதர்களின் நிழல்போலத் தொடர்ந்து அவர்களுக்கு விசுவாசமாக இருக்கும் நாய்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகத் தலைமுறை தலைமுறையாக நேபாள மக்களால் கடைபிடிக்கப்பட்டு வரும் இந்த அழகான திருவிழா குறித்த பதிவுகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதுடன், உலகளாவிய நெட்டிசன்களின் பாராட்டுக்களையும் குவித்து வருகிறது.