நீங்கள் நினைத்த காரியம் நிறைவேற… இந்த விஷயத்தை தவறாம செய்யுங்க… ஆவணி மாதத்தின் ஆன்மீக ரகசியம்…!

By Divyamayakannan on ஆவணி 20, 2025

Spread the love

தமிழ் மாதங்களில் வரும் ஆவணி மாதத்தை கேரளாவில் முதல் மாதமாகவும் சிம்ம மாதமாகவும் கருதப்படுகிறது. தமிழர்களான நாம் தமிழ் மாதங்களில் ஆவணி மாதத்தை ஐந்தாவது மாதமாக கருதுகிறோம். சிம்ம மாதம் மற்றும் வேங்கை மதம் என்று ஆவணி மாதத்திற்கு வேறு பெயர்களும் உண்டு. சிங்கத்திற்கு இணையான மாதமும் இல்லை, சிவபெருமானை விட மேம்பட்ட இறைவனும் இல்லை. ஆனி மாதத்தில் வரும் மூலம் நட்சத்திரத்தை ஆணி மூலம் அரசாளும் என்று கூறுவர்.

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் ஆனி மாதத்தில் வரும் மூல நட்சத்திரத்தை திருவிழா போல் கொண்டாடுகின்றனர். இந்தத் திருவிழாவில் கருங்குருவிக்கு உபதேசம் செய்தல், நாரைக்கு முக்தி கொடுப்பது, பிட்டுக்கு பலி கொடுப்பது, தருமிக்கு பொன் கொடுப்பது, வளையல் கொடுப்பது சிவபெருமானின் திருவிளையாடல்கள் என பல நிகழ்வுகளை இத்திருவிழாவில் நிகழ்ச்சியாக நடத்துகின்றனர். இது மட்டும் இல்லாமல் மாணிக்கவாசகருக்கு குதிரைகளைக் கொண்டு வந்து இறைவன் ஒப்படைத்ததும் ஆவணி மாதத்தின் சிறப்பாகும். திருவோணம் நட்சத்திரத்தை மலையாள மக்கள் ஓணம் பண்டியாக கொண்டாடுகின்றனர்.

   

ஓணம் பண்டிகையை அன்று 64 வகையான இனிப்பு பண்டங்களை தயார் செய்து விருந்து வைப்பார்கள். மன்னன் மகாலி ஆவணி மாதம் சிராவண துவாதசி நாளில் வாமண மூர்த்திக்கு தானம் கொடுத்தார். திருவோணம் நட்சத்திரத்தில் ஏற்றும் தீபமானது சிராவான தீபம் என்று அழைக்கப்படுகிறது. இந்த தீபத்தை ஏற்றி வேண்டினால் நாம் விரும்பியதை நிறைவேற்றும். மலையப்ப சுவாமி ஊஞ்சல் மண்டபத்தில் திருமண கோலத்தில் இருக்கும் திருப்பதி வெங்கடாஜலபதிக்கு 1008 திரிகள் கொண்ட நெய் தீபம் ஏற்றுவர். இத்தீபத்தின் பெயர் ‘சகஸ்ர தீப அலங்கார கார சேவை’ என்று கூறுவர்.

   

ஆவணி மாதத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமைகளை விரத நாட்களாக கூறுவர். புதிதாக திருமணமான பெண்கள் செவ்வாய் வெள்ளிக்கிழமைகளில் விரதம் கை பிடித்தால் நல்லது. ஆவணி மாதத்தில் சிவனை வழிபடலாம். ஆவணி மாதத்தில் வரும் செவ்வாய், வெள்ளி, சனி ஆகிய நாட்களை முக்கிய நாட்களாக கருதுகின்றனர். ஆவணி ஞாயிற்றுக்கிழமைகளில் சூரிய வழிபாட்டு செய்தால் நல்லது. ஆவணி மாதத்தில் புதிய வீட்டில் கிரகப்பிரவேசம் செய்தால் வாழ்க்கை நன்றாக அமையும். அதேபோல் ஆவணி மாதத்தில்தான் விநாயகர் சதுர்த்தி வரும் அன்று விரதம் இருந்து விநாயகரை போற்றினால் நன்மை உண்டாகும்.