தமிழகத்தில் அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் சிறப்பு வகுப்புகள் நடத்துவதற்கு பள்ளி கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. அதாவது காலாண்டு தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்த 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. அவர்களுக்கு பள்ளி முடிந்த பிறகு சிறப்பு வகுப்புகள் நடத்துவது குறித்து பரிசீலனை நடைபெற்று வருகிறது. இது குறித்து அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.
