இன்றே கடைசி வாய்ப்பு…. மாலை 6 மணிக்குள் இதைச் செய்யாவிட்டால் ரேஷன் பொருட்கள் கட்?… தமிழக அரசு அறிவிப்பு….!

By Nanthini on ஆவணி 8, 2026

Spread the love

தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் மின்னணு முறையில் குடும்ப உறுப்பினர்களின் விவரங்களைச் சரிபார்க்கும் சிறப்பு கைவிரல் ரேகை பதிவு (eKYC) முகாம் இன்று நடைபெறுகிறது. இதுவரை eKYC செய்யாத பொதுமக்கள் அனைவரும் காலை 9:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை இந்தச் சேவையைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

சொந்த ஊரில் இல்லாதவர்கள் அல்லது வெளியூரில் வசிப்பவர்கள் சிரமமின்றி தங்களுக்கு அருகில் இருக்கும் ஏதேனும் ஒரு நியாயவிலைக் கடைக்குச் சென்று தங்களுடைய கைவிரல் ரேகையைப் பதிவு செய்ய சிறப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. எனவே, பயனாளிகள் அனைவரும் தங்களின் குடும்ப அட்டை (ரேஷன் கார்டு) மற்றும் அரசு வழங்கிய அடையாளச் சான்றை தவறாமல் எடுத்துச் சென்று இந்தச் சிறப்பு முகாமின் மூலம் தங்களின் விவரங்களைப் புதுப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.