தமிழகத்தில் பொதுவாகவே தொடர் விடுமுறை நாட்கள் மற்றும் வார இறுதி நாட்களில் மக்களின் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். அதன்படி தற்போது பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் அரையாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் 23ஆம் தேதி உடன் அரையாண்டு தேர்வு முடிவடைந்த நிலையில் டிசம்பர் 24 முதல் ஜனவரி 4-ம் தேதி வரை 12 நாட்கள் மாணவர்கள் அனைவருக்கும் அரையாண்டு தேர்வு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடுமுறையில் புத்தாண்டும் வருவதால் அனைவரும் தங்கள் சொந்த ஊருக்கு படை எடுத்துள்ளனர். பள்ளி தொடர் விடுமுறை மற்றும் புத்தாண்டு விடுமுறையை முன்னிட்டு மக்கள் கூட்ட நெரிசல் இன்றி ஊர்களுக்கு செல்ல சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. அதன்படி டிசம்பர் 31 நாளையும் நாளை மறுநாளும் சென்னை, கோவை, திருச்சி உள்ளிட்ட நகரங்களில் இருந்து கூடுதலாக சுமார் 1000 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. சொந்த ஊர் செல்ல திட்டமிட்டுள்ளவர்கள் www.tnstc.in என்ற இணையதளம் அல்லது TNSTC செயலியில் இப்போதே டிக்கெட் புக் செய்து கொள்ளுங்கள்.
