தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகை வருகின்ற ஜனவரி 15ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. தொடர்ந்து விடுமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் சென்னை மற்றும் கோவை போன்ற பெருநகரங்களில் வசிக்கும் வெளியூர் மக்கள் பொங்கல் பண்டிகையை சொந்த ஊர்களுக்கு சென்று கொண்டாடுவது வழக்கம். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பேருந்து மற்றும் ரயில்களில் டிக்கெட் விற்று தீர்ந்துவிட்டது. பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு பொங்கல் மற்றும் தீபாவளி போன்ற பண்டிகை நாட்களில் அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம்.
அதன்படி பொங்கல் பண்டிகைக்கு சிறப்பு பேருந்துகளை இயக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. பொங்கல் விடுமுறையை முன்னிட்டு மக்கள் கூட்ட நெரிசல் இன்றி ஊர்களுக்கு செல்ல அரசு சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இது குறித்து அமைச்சர் சிவசங்கர் தலைமையில் நாளை மறுநாள் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து சிறப்பு பேருந்துகள் குறித்த அறிவிப்பு வெளியாகும். சுமார் 1600 கூடுதல் பேருந்துகளை இயக்க அரசு திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே சிறப்பு ரயில்களும் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மதுரை அண்ணா நகர் பகுதியில் தனியாக வசித்து வரும் முதியவர் ஒருவரை, ஸ்வீடனில் இருந்து வந்த அவசர அழைப்பின் பேரில்…
கர்நாடகாவில் நீண்ட நாட்களாக நீடித்து வந்த முதல்வர் நாற்காலிப் போட்டி ஒருவழியாக முடிவுக்கு வந்து, டி.கே. சிவகுமார் புதிய முதல்வராகப்…
கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் எம்பி ஜோதிமணி, தமிழக அரசியல் சூழல், வரவிருக்கும் மாநிலங்களவை (ராஜ்யசபா)…
தமிழகத்தில் முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்ற வெறும் 25 நாட்களிலேயே, மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியை அடுத்த…
தமிழக பா.ஜ.க-விலிருந்து அதன் முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை விலகப் போவதாகவும், தனது பிறந்தநாளான இன்று அவர் புதிய அரசியல்…
கடந்த பல வருடங்களாகவே இந்திய இளைஞர்களிடம் ஐடி துறை மிகவும் பிரபலமாகி வருகிறது. இதனால் கல்லூரி மாணவர்கள் பலரும் கம்ப்யூட்டர்…