பரபரப்பு..! உங்க மீது ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது..? அடுத்த 7 நாட்களுக்குள்… TVK வில் இணைந்த நால்வருக்கும் சபாநாயகர் நோட்டீஸ்..!!

By Soundarya on ஆனி 12, 2026

Spread the love

அதிமுக சார்பில் சட்டமன்ற உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, பின்னர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்த ஜெயக்குமார், இசக்கி சுப்பையா, மரகதம் குமரவேல் மற்றும் சத்யபாமா ஆகிய நால்வருக்கும் தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் அதிரடியாக நோட்டீஸ் அனுப்பியுள்ளார். கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் உங்கள் மீது ஏன் உரிய நடவடிக்கை எடுக்கக் கூடாது? என்று கேள்வி எழுப்பியுள்ள சபாநாயகர், இது குறித்து அடுத்த 7 நாட்களுக்குள் தகுந்த விளக்கத்தை அளிக்குமாறு உத்தரவிட்டுள்ளார். இந்த திடீர் உத்தரவு தமிழக அரசியல் வட்டாரத்தில் தற்பொழுது பெரும் பரபரப்பையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

   

கட்சியின் முடிவுகளுக்கு மாறாகச் செயல்பட்டது அல்லது மாற்று முகாமிற்கு ஆதரவு தெரிவித்தது போன்ற அரசியல் நகர்வுகளின் பின்னணியிலேயே இந்த அதிரடி சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. சபாநாயகரின் இந்த நோட்டீஸிற்கு இந்த நான்கு முன்னாள் எம்.எல்.ஏ.க்களும் அளிக்கும் விளக்கத்தைப் பொறுத்தே அவர்களின் அடுத்தகட்ட அரசியல் நகர்வுகளும், சட்டமன்ற விதிகளின் படியான நடவடிக்கைகளும் அமையும். இதனால், தமிழக அரசியலில் அடுத்த சில நாட்களுக்கு இந்த விவகாரம் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.