தமிழக சட்டப்பேரவையில் காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது, முதலமைச்சர் விஜய் அவர்கள் சர்க்காரியா கமிஷன், மிசா சட்டம் மற்றும் அவையில் இல்லாத நபர்கள், நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்து பேசிய கருத்துகளை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று திமுக தரப்பில் வலியுறுத்தப்பட்டது. ஆனால், முதலமைச்சரின் உரையில் எந்தவொரு பகுதியையும் அவைக்குறிப்பில் இருந்து நீக்க முடியாது என்றும், அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர் திட்டவட்டமாகத் தீர்ப்பளித்தார். சபாநாயகரின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, திமுக உறுப்பினர்கள் அவையின் மையப்பகுதிக்கு வந்து ‘செத்துப்போச்சு செத்துப்போச்சு ஜனநாயகம் செத்துப்போச்சு’ என்று முழக்கங்களை எழுப்பி, சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டு கடும் அமளியில் ஈடுபட்டனர்.
திமுக உறுப்பினர்களின் இந்த தொடர் அமளியைக் கண்ட சபாநாயகர், அவர்கள் அவையை முடக்குவதையே நோக்கமாகக் கொண்டு, அதற்கான பயிற்சியை மட்டுமே எடுத்துக்கொண்டு வந்துள்ளதாகக் குற்றம்சாட்டினார். மேலும், அவையின் அமைதியைக் குலைக்கும் வகையில் நடந்துகொண்ட திமுக உறுப்பினரைப் பார்த்து கோபத்துடன் “கெட் அவுட்” என்று பேரவைத் தலைவர் கத்தினார். பேரவையின் நடவடிக்கைகளுக்குத் தொடர்ந்து இடையூறு விளைவித்து, சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட திமுக உறுப்பினர்கள் அனைவரும் அவைக் காவலர்களைக் கொண்டு உடனடியாக அவையிலிருந்து வெளியேற்றப்பட்டனர். இதனால் சட்டப்பேர வளாகத்தில் பெரும் பரபரப்பும் பதற்றமும் நிலவியது.
கோலாப்பூர் – இச்சல்கரஞ்சி-கப்னூர் வழித்தடத்தில் உள்ள கப்னூர் சௌக் பகுதியில் அதிவேகமாக வந்த டாடா பஞ்ச் கார், முன்னால் சென்று…
உணவகத்தின் கலகலப்பான சத்தங்களுக்கு நடுவே, மேஜையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த ஹாட் பாட் பாத்திரம் மெல்லிய புகையுடன் கொதித்துக் கொண்டிருந்தது. தட்டிலிருந்த…
தலைநகர் டெல்லி மயூர் விஹார் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்த 9 வயது சிறுமி…
கேரளாவில் வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தைக் கவர்ந்து செல்ல, பெண் ஒருவர் திரைப்பட…
உத்தரப் பிரதேச மாநிலம் புதௌன் மாவட்டத்தைச் சேர்ந்த கருலியா கிராமத்தைச் சேர்ந்தவர் ஏக்தா. ஏழு மாதக் கர்ப்பிணியாக இருந்த இவருக்குச்…
உத்தரப் பிரதேச மாநிலத்தில் 11-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போதே காதலிப்பதாகக் கூறி, 10 ஆண்டுகள் அத்துமீறலில் ஈடுபட்டு ஏமாற்றிய…