தமிழக சட்டப்பேரவையில் திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு செய்தியாளர்களைச் சந்தித்து, முதலமைச்சரின் பேச்சுக்கும் பேரவைத் தலைவரின் நடவடிக்கைக்கும் தனது கடும் கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளார். சர்க்காரியா கமிஷன் மற்றும் மிசா விவகாரங்கள் குறித்து முதலமைச்சர் உண்மைக்கு மாறானத் தகவல்களைப் பேசி, திமுகவை அசிங்கப்படுத்தும் நோக்கில் செயல்பட்டுள்ளதாக அவர் குற்றம்சாட்டினார். மேலும், மிசா, அமலாக்கத்துறை (ED) மற்றும் ஏற்கனவே முடிந்துபோன வழக்குகள் குறித்துத் தொடர்ந்து தவறானத் தரவுகளை அவையில் முதலமைச்சர் கூறிவருவதாகவும், அதற்கானத் தங்களின் நியாயமான விளக்கங்களைப் பேரவையில் பதிவு செய்ய பேரவைத் தலைவர் அனுமதி மறுத்துவிட்டதாகவும் அவர் சாடினார்.
முதலமைச்சரின் உண்மைக்குப் புறம்பானப் பேச்சுகளை சட்டப்பேரவை அவைக்குறிப்பில் இருந்து உடனடியாக நீக்க வேண்டும் எனத் தங்களது தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டதாக கே.என்.நேரு தெரிவித்தார். இருப்பினும், பேரவைத் தலைவர் அந்த கோரிக்கையை ஏற்க மறுத்ததோடு, தங்களுக்குப் பதிலளிக்க வாய்ப்பளிக்காமல் திமுக உறுப்பினர்களை அவையிலிருந்து வெளியேற்றியதாகக் கூறினார். முதலமைச்சரின் தவறான அறிக்கைகளுக்குப் பதில் சொல்ல முற்பட்டபோது தங்களை வெளியேற்றியதையும், பேரவைத் தலைவரின் ஒருதலைப்பட்சமான நடவடிக்கையையும் கண்டித்துத் தாங்கள் பேரவையிலிருந்து வெளிநடப்பு செய்துள்ளதாக அவர் தனது பேட்டியில் தெளிவுபடுத்தினார்.
மதுரை அரசு மருத்துவமனையில் காயமடைந்த தனது நண்பனுக்கு உடனடியாகச் சிகிச்சை அளிக்கக் கோரி இளைஞர் ஒருவர் கடும் ரகளையில் ஈடுபட்டுள்ளார்.…
பெண்களுக்கான முக்கியத்துவமும் உரிமைகளும் பெண்களை மேன்மைப் படுத்துவதற்காகத்தானே தவிர, மற்றவர்களை வன்முறையால் ஒடுக்குவதற்காக அல்ல. பொதுவெளியில் நடைபெறும் இதுபோன்ற சம்பவங்கள்,…
பசியால் வாடும் ஒரு சிறு குழந்தை, உயிர் பிழைப்பதற்காக ஒரு துண்டு ரொட்டியை நாடும்போது அதன் மீது வன்முறையைப் பிரயோகிப்பது…
மறு கேஒய்சி படிவத்தைச் சமர்ப்பித்தும் கணக்கு புதுப்பிக்கப்படாமல் தாமதமடைவது, வங்கி வாடிக்கையாளர்கள் தினமும் சந்திக்கும் மிகப்பெரிய சிரமங்களில் ஒன்றாகும். வங்கி…
நடுவானில் பறந்து கொண்டிருந்த ஹெலிகாப்டர் ஒன்றின் வால் பகுதியில் இருந்த 'டெயில் ரோட்டார்' அமைப்பில் திடீரென ஏற்பட்ட மெக்கானிக்கல் பழுது…
தேசிய நெடுஞ்சாலை 24-ல் நிலைதடுமாறி பைக்கிலிருந்து கீழே விழுந்து படுகாயமடைந்த 30 வயது இளைஞர் நிதினுக்கு, காசிப்பூர் காவல் துறையினர்…