“அங்க உட்கார்ந்து பேசுறது நல்லா கேக்குது”…. எதிர்க்கட்சி எம்.எல்.ஏ-க்களுக்கு சபாநாயகர் அதிரடி செக்…. சட்டசபையில் பரபரப்பு….!

Spread the love

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட போது, அவை நடவடிக்கைகளில் பெரும் பரபரப்பும் விவாதமும் நிலவின. வேளாண்மைத் துறை அமைச்சர் வினோத் பட்ஜெட் உரையை வாசிக்கத் தொடங்கிய வேளையில், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலர் தங்களுக்குள் தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். இதைக் கவனித்த சபாநாயகர் ஜேசிடி பிரபாகர், மணி அடித்து உரையை நிறுத்தி, அவையின் கவனத்தைச் சிதறடிக்காமல் அமைதி காக்குமாறு எதிர்க்கட்சி எம்.எல்.ஏ-க்களுக்குக் கண்டிப்புடன் உத்தரவிட்டார்.

முன்னதாக, அமைச்சரின் உரையில் நீர்வளத் துறையின் முக்கியத்துவம் மற்றும் பாசன நீர் கடைமடை வரை தடையின்றிச் சென்று சேர வேண்டியதன் அவசியம் குறித்துப் பேசப்பட்டு வந்தது. ஆனால், பட்ஜெட் உரைக்கிடையே அமைச்சர் வினோத் திடீரென முதலமைச்சர் விஜய்யைப் புகழ்ந்து பேசத் தொடங்கினார். “கோட் சூட் போட்ட விவசாயி”, “பணநாயகத்தை தோற்கடித்த பாமரனின் ஜனநாயகன்” மற்றும் “ஒவ்வொரு விவசாயக் குடும்பத்திற்கும் மகனாக விளங்குபவர்” எனப் பலவாறாக முதலமைச்சரைப் பாராட்டிப் பேசினார்.

அமைச்சரின் இந்தப் புகழுரைக்கு பேரவையில் இருந்த திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது குறுக்கிட்ட சபாநாயகர், பட்ஜெட் உரையில் உள்ள விவரங்களை மட்டுமே வாசிக்குமாறு அமைச்சருக்கு அறிவுறுத்தினார். இருப்பினும், அமைச்சர் மீண்டும் ஒருமுறை முதலமைச்சரைப் பாராட்டிவிட்டுத் தனது பட்ஜெட் தாக்கல் உரையை நிறைவு செய்தார்.

பட்ஜெட் தாக்கல் முடிந்த பிறகும் அமைச்சரின் புகழுரைத் தொடர்ந்ததால், கோபமடைந்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவையின் மையப் பகுதிக்கு வந்து அமளியில் ஈடுபட்டனர். மேலும், பட்ஜெட்டைத் தவிர்த்துப் பேசப்பட்ட புகழுரைகளை அவைக் குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என முழக்கங்களை எழுப்பினர். இதற்குப் பதிலளித்த சபாநாயகர் ஜேசிடி பிரபாகர், அவைக் குறிப்புகளைப் பரிசீலித்து, விதிகளுக்குப் புறம்பான பேச்சுக்கள் இருந்தால் மட்டுமே அவை நீக்கப்படும் என்று கூறி உறுப்பினர்களை அமைதிப்படுத்தினார்.

Nanthini

Recent Posts

திக்.. திக்..! பைக் மீது பயங்கர மோதல்… திரும்பி கூட பார்க்காமல் எஸ்கேப் ஆன கார் ஓட்டுநர்… பதறவைக்கும் CCTV காட்சி…!!

கோலாப்பூர் – இச்சல்கரஞ்சி-கப்னூர் வழித்தடத்தில் உள்ள கப்னூர் சௌக் பகுதியில் அதிவேகமாக வந்த டாடா பஞ்ச் கார், முன்னால் சென்று…

2 மணத்தியாலங்கள் ago

“மகள் போனதும் ஆட்டம் ஆரம்பம்!”… பொறுமை இழந்த மனைவி… கொதித்து எழுந்த கோபம்… கணவன் மீது வீசப்பட்ட சூடான திரவம்… ரத்த உறைய வைக்கும் சம்பவம்…!!

உணவகத்தின் கலகலப்பான சத்தங்களுக்கு நடுவே, மேஜையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த ஹாட் பாட் பாத்திரம் மெல்லிய புகையுடன் கொதித்துக் கொண்டிருந்தது. தட்டிலிருந்த…

2 மணத்தியாலங்கள் ago

திக் திக்…! திடீரென மயங்கி விழுந்த 9 வயது சிறுமி… பள்ளியில் அரங்கேறிய அதிர்ச்சி… வைரலாகும் ஷாக்கிங் வீடியோ…!!

தலைநகர் டெல்லி மயூர் விஹார் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்த 9 வயது சிறுமி…

2 மணத்தியாலங்கள் ago

என்னை கடத்திட்டாங்க…! சினிமா படத்தையே மிஞ்சிய சேசிங்… 12 கி.மீ. காரை விரட்டிப் பிடித்த போலீஸ்… சிக்கிய பெண் யார்?…!!

கேரளாவில் வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தைக் கவர்ந்து செல்ல, பெண் ஒருவர் திரைப்பட…

2 மணத்தியாலங்கள் ago

7 மாத கர்ப்பம்… வயிற்றில் 4 குழந்தைகள்… ஒரே இரவில் மாறிய தலைவிதி… மருத்துவமனையில் அடுத்தடுத்து நடந்த அதிரவைக்கும் சம்பவங்கள்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் புதௌன் மாவட்டத்தைச் சேர்ந்த கருலியா கிராமத்தைச் சேர்ந்தவர் ஏக்தா. ஏழு மாதக் கர்ப்பிணியாக இருந்த இவருக்குச்…

3 மணத்தியாலங்கள் ago

“பலமுறை கருக்கலைப்பு…” 10 ஆண்டுகளாக நம்பி ஏமார்ந்த இளம்பெண்… போலீஸ் வேலை கிடைத்ததும் கம்பி நீட்டிய காதலன்… பகீர் பின்னணி…!!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் 11-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போதே காதலிப்பதாகக் கூறி, 10 ஆண்டுகள் அத்துமீறலில் ஈடுபட்டு ஏமாற்றிய…

3 மணத்தியாலங்கள் ago