சட்டசபையில நாளைக்கு இருக்கு… “தைரியம் இருந்தா பதில் சொல்லுங்க விஜய்”…. சட்டப்பேரவையில் கொதித்த எதிர்க்கட்சித் தலைவர்…!

Spread the love

தமிழகத்தில் முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசு தாக்கல் செய்துள்ள வேளாண் பட்ஜெட்டில் புதிய திட்டங்களோ, விவசாயிகளுக்கான தீர்வுகளோ எதுவும் இல்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கடுமையாகச் சாடியுள்ளார். தலைமைச்செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், இந்த பட்ஜெட்டை ‘வேளாண் பட்ஜெட்’ என்று சொல்வதை விட, முதலமைச்சருக்கு ஜால்ரா அடிக்கும் வகையில் மரபுகளை மீறி தயாரிக்கப்பட்ட அறிக்கை என்றே கூற வேண்டும் என்று சாடினார். தவெக ஆட்சி அமைந்த கடந்த மூன்று மாத காலத்தில் விவசாயிகளே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த அரசின் மக்கள் விரோதப்போக்கைக் கண்டித்து திமுக உறுப்பினர்கள் கருப்பு சட்டை அணிந்து சட்டப்பேரவைக் கூட்டத்தில் தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

கடந்த திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட பயனுள்ள திட்டங்களுக்கு, முன்னால் ஒரு புதிய வார்த்தையைச் சேர்த்து பெயர் மாற்றம் செய்து மட்டுமே தவெக அரசு இந்த பட்ஜெட்டைத் தாக்கல் செய்துள்ளதாக உதயநிதி குற்றம்சாட்டினார். தேர்தல் வாக்குறுதியில் விவசாயிகளின் பயிர்க்கடன்கள் முழுவதும் தள்ளுபடி செய்யப்படும் என்று கூறி ஆட்சிக்கு வந்த தவெக, தற்போது அதனை முழுமையாக நிறைவேற்றாமல் விவசாயிகளை ஏமாற்றியுள்ளது. முதலில் ரூ.50,000 என்றும், பின்னர் ரூ.75,000 என்றும் கடன் தள்ளுபடி அளவை உயர்த்தி அறிவித்த போதிலும், முழுமையான கடன் தள்ளுபடி கோரும் விவசாயிகளின் நியாயமான கோரிக்கைக்கு இந்த அரசு இதுவரை எந்தவொரு தெளிவான பதிலையும் அளிக்கவில்லை.

மேலும், மேகதாது அணை விவகாரத்தில் தமிழகத்திற்கான உரிமைகள் மறுக்கப்படும் நிலை நீடிப்பதாகவும், தமிழகத்திற்கு உரிய தண்ணீரைத் தர முடியாது என அண்டை மாநிலம் உறுதியாகக் கூறிய நிலையிலும் முதல்வர் அமைதி காப்பது வேதனையளிக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார். மேகதாது பிரச்சனை தொடர்பாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தியும், முதல்வர் விஜய் இதுவரை வாய் திறக்காமல் மௌனம் சாதித்து வருவதாகக் குற்றம்சாட்டினார். இதனால் குறுவை சாகுபடி செய்ய முடியாமல் தமிழக விவசாயிகள் பெரும் பாதிப்புக்கும் சொல்லொணாத் துயரத்திற்கும் தள்ளப்பட்டுள்ளனர்.

விவசாயிகளின் இந்த இக்கட்டான சூழ்நிலை மற்றும் வாழ்வாதாரப் பிரச்சனைகள் குறித்து விவாதிக்க நாளை சட்டமன்றத்தில் ஒத்திவைப்புத் தீர்மானம் கொண்டு வர மனு அளித்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார். பேரவையில் இந்தத் தீர்மானத்திற்கு அனுமதி வழங்கப்படும் என்ற நம்பிக்கையுடன், விவசாயிகள் மற்றும் பட்ஜெட் தொடர்பான பல்வேறு கேள்விகளை எழுப்பத் தயாராக உள்ளதாக அவர் கூறினார். “மக்களைப் போலவே நாங்களும் முதலமைச்சர் வாய் திறந்து பதிலளிப்பார் என்று ஆவலோடு காத்திருக்கிறோம்; தைரியம் இருந்தால் நாளை சட்டமன்றத்தில் எங்கள் கேள்விகளுக்கு முதலமைச்சர் பதில் சொல்லட்டும்” என உதயநிதி சவால் விடுத்துள்ளார்.

Nanthini

Recent Posts

ஐயோ கொடுமையே… காதல் திருமணம் சோகத்தில் முடிந்த விபரீதம்… மனைவியை அடித்துக் கொன்று தப்பிய கணவனின் கொடூரம்… உ . பி – யில் அரங்கேறிய பகீர் சம்பவம்…!

உத்தரப் பிரதேச மாநிலம் பராபங்கியைச் சேர்ந்த சந்தீப் வர்மா என்பவரும் ரீமா வர்மா (30) என்பவரும் காதலித்து திருமணம் செய்து…

14 seconds ago

ஏங்க எழுந்திரிங்க… நாம வீட்டுக்குப் போயிடலாம்… விபத்தில் இறந்த கணவனின் உடலைப் பிடித்து கதறிய மனைவி… திருவாரூரில் நடந்த சோகம்…!

திருவாரூர் வடம்போக்கி பகுதியைச் சேர்ந்தவர் சங்கர்ராமன் (73). இவர் அங்குள்ள தெட்சிணாமூர்த்தி மடத்தில் பணியாற்றி வந்தார். இந்நிலையில், தியாகராஜர் கோயில்…

14 minutes ago

அட கொடுமையே… பட்டாசு வெடித்தால் நிரந்தர பார்வை இழப்பு?… மருத்துவர்கள் விடுக்கும் அதிரடி எச்சரிக்கை… மும்பையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

தீபாவளி பண்டிகையின் போது பட்டாசுகளை வெடிக்கும்போது ஏற்படும் விபத்துகளால் கடுமையான தீக்காயங்கள் மற்றும் நிரந்தர பார்வை இழப்பு ஏற்படக்கூடும் என்று…

31 minutes ago

திக் திக்… மகளுடன் தனியாக இருந்த ஊழியர்… ஆத்திரத்தில் முதலாளி செய்த பகீர் காரியம்… பெங்களூரில் அரங்கேறிய கொடூர சம்பவம்…!

பெங்களூரில் நிகழ்ந்த ஒரு கோரச் சம்பவத்தில், தன் உற்பத்திப் பிரிவில் பணிபுரியும் கிரண் என்பவரை, தன் மகளுடன் வீட்டில் தனித்திருந்த…

35 minutes ago

என்னது… விஜய்யும் த்ரிஷாவும் ஒண்ணாவா?… ஜெகன் மோகன் ரெட்டி திருமணத்தில் நடந்த அதிரடி என்ட்ரி… உறைந்துபோன ரசிகர்கள்… இணையத்தை அதிரவைக்கும் வைரல் வீடியோ…!

ஆந்திர முன்னாள் முதலமைச்சர் ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டியின் இல்லத் திருமண வரவேற்பு விழா சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. இந்த…

55 minutes ago