Connect with us

அஜித்தின் சினிமா கேரியருக்கு அச்சாரம் போட்ட பாடகர் எஸ் பி பி… பலரும் அறியாத சம்பவம்!

CINEMA

அஜித்தின் சினிமா கேரியருக்கு அச்சாரம் போட்ட பாடகர் எஸ் பி பி… பலரும் அறியாத சம்பவம்!

தமிழ் சினிமாவில் இன்று டாப் 5 நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் அஜித் குமார். இவர் 1992 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான பிரேமபுஸ்தகம் என்ற திரைப்படத்தின் மூலமாக தெலுங்கில் நடிகராக அறிமுகமானார். இந்த படத்தை பூர்ணச்சந்திர ராவ் தயாரிக்க, கொல்லப்புடி ஸ்ரீனிவாஸ் மற்றும் கொல்லப்புடி மாருதி ராவ் ஆகியோர் இயக்கினர். இந்த படமே அஜித் முதலும் கடைசியுமாக நடித்த நேரடி தெலுங்கு படமாகும்.

அதன் பின்னர் அடுத்த ஆண்டு ரிலீசான அமராவதி திரைப்படத்தின் மூலமாக தமிழில் அறிமுகமானார். அதையடுத்து வந்த ஆண்டுகளில் வெற்றிக்காக போராடி வந்த அவருக்கு ஆசை படம் திருப்புமுனையாக அமைந்தது. அதன் பிறகு அடுத்தடுத்து வெற்றிப் படங்களாக கொடுத்து இப்போது 100 கோடி ரூபாய்க்கு மேல் சம்பளம் வாங்கும் நடிகராக உயர்ந்துள்ளார்.

#image_title

   

அஜித்துக்கு, எந்தவொரு பின்புலமும் இல்லாமல் சினிமாவில் தானே போராடி வளர்ந்தவர் என்ற பிம்பம் உண்டு. அது ஓரளவுக்கு உண்மையும் கூட. அவரின் சக போட்டியாளர்களான விஜய், சூர்யா மற்றும் பிரசாந்த் போன்றவர்கள் எல்லாம் சினிமா பின்புலத்தில் இருந்து வந்தவர்கள்.

 

அஜித்துக்கு இதுபோன்ற வழிகாட்டிகள் இல்லாததால் அவர் இடையில் பல சறுக்கல்களை சந்தித்தார். தொடர்ச்சியாக ப்ளாப் படங்கள் கொடுத்தார். ஆனாலும் அதில் இருந்து மீண்டு வந்தார். தனக்கு உதவ யாரும் இல்லை என்று அஜித்தே சில நேர்காணல்களில் பேசியிருந்தார். இதுவே அவருக்கான ரசிகர்கள் உருவாவதற்கும் ஒரு காரணமாக அமைந்தது.

ஆனால் அஜித்தின் சினிமா கேரியர் தொடங்குவதற்கு மறைந்த பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியம் பெரும் உதவி செய்துள்ளார் என்பது, பலரும் அறியாத தகவல். அஜித்தும் எஸ் பி பியின் மகன் சரணும் பள்ளித் தோழர்கள். அதனால் அஜித் அடிக்கடி எஸ் பி பியின் வீட்டுக்கு செல்லும் வழக்கம் உள்ளவர். அப்போது தன்னுடைய நண்பரான தயாரிப்பாளர் பூர்ணச்சந்திர ராவ் தான் தயாரிக்க உள்ள புதிய படத்துக்கு அழகிய தோற்றம் உடைய ஒரு இளைஞரை தேடி வந்துள்ளார்.

#image_title

இதையறிந்த எஸ் பி பி தனது மகனின் நண்பரான அஜித்தை அந்த தயாரிப்பாளரை சென்று சந்திக்க் சொல்லியுள்ளார். அப்படி அஜித்துக்கு கிடைத்ததுதான் பிரேமபுஸ்தகம் என்ற பட வாய்ப்பு. இதை எஸ் பி பி சில ஆண்டுகளுக்கு முன்னர் அளித்த ஒரு நேர்காணலில் கூறியுள்ளார்.

Continue Reading
To Top