காலையிலேயே ஷாக்… விஜய் அரசுக்கு ஆதரவு வாபஸ்… அரசியலில் திடீர் பரபரப்பு…!

By Nanthini on வைகாசி 24, 2026

Spread the love

கோவையில் 10 வயது சிறுமி வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், தமிழக அரசை அதிமுக முன்னாள் அமைச்சரும், அக்கட்சியின் முக்கிய நிர்வாகியுமான எஸ்பி வேலுமணி கடுமையாக விமர்சித்துள்ளார். தமிழகத்தில் ஆட்சி மாறினாலும், சட்டம்-ஒழுங்கு மற்றும் பாதுகாப்புச் சூழல் போன்ற காட்சிகள் மாறவில்லை என்பதற்கு இந்த கொடூர நிகழ்வே சான்றாக உள்ளதாக அவர் சாடியுள்ளார்.

மேலும், இந்த வழக்கில் தற்போதைய தவெக (தமிழக வெற்றிக் கழகம்) அரசை நோக்கி நேரடியாக தன் கண்டனக் கணைகளை வீசியுள்ள அவர், காவல்துறையினரால் தற்போது கைது செய்யப்பட்டுள்ள நபர்கள் உண்மையான குற்றவாளிகளா என்பதை அரசு தீர விசாரித்து உறுதி செய்ய வேண்டும் என்றும், இதில் அப்பாவி மக்கள் யாரும் பாதிக்கப்படக்கூடாது என்றும் பகிரங்கமாகவே சந்தேகம் கிளப்பியுள்ளார். கடந்த வாரம் வரை தவெக தலைவர் விஜய்க்கு ஆதரவான அரசியல் மனநிலையில் கருத்துக்களைப் பேசி வந்த எஸ்பி வேலுமணி, இந்த சம்பவத்திற்குப் பிறகு திடீரென தனது அரசியல் நிலைப்பாட்டை மாற்றி, தவெக அரசுக்கு எதிராக மிகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.