சட்டமன்ற தேர்தலை எதிர்நோக்கி அரசியல் கட்சியினர் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் திமுக, அதிமுக, TVK என மாற்றுக்கட்சியினர் ஒருவரையொருவர் தாக்கியும், ஆதரவு தெரிவித்தும் பேசி வருகிறார்கள். இந்நிலையில் 2026 ஆம் தேர்தலில் வாய்ப்பு இருந்தால், திமுக கூட்டணியில் போட்டியிடுவோம் என்று, தனியரசு தெரிவித்துள்ளார்.
2016 ஆம் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்து எம்எல்ஏ ஆனவர் தனியரசு. இவர் சமீபமாக திமுகவுக்கு ஆதரவு தெரிவித்து வருகிறார். இந்நிலையில் இன்று CM ஸ்டாலினை அண்ணா அறிவாலயத்தில் சந்தித்து பேசினார். பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்த அவர், பாஜகவின் கிளை அமைப்பாக அதிமுக செயல்பட்டு வருவதாக விமர்சித்தார்.
