“நாங்கள் நடனமாடியும் போராடுவோம்….” டெல்லி ஹோட்டலில் ஆட்டம் பாட்டம்…! வைரல் கொண்டாட்ட வீடியோவிற்கு சௌரவ் தாஸ் அதிரடி விளக்கம்…!

By Devi Ramu on ஆடி 27, 2026

Spread the love

டெல்லி ஜந்தர் மந்தரில் 37 நாட்களாக நடைபெற்று வந்த ‘காக்ரோச் ஜனதா கட்சி’ அமைப்பின் போராட்டம் வாபஸ் பெறப்பட்டதைத் தொடர்ந்து, அச்சமைப்பின் உறுப்பினர்கள் நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் நடனமாடி மகிழ்ந்த வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தின. மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில், இந்த வெற்றி கொண்டாட்டங்களைச் சிலர் விமர்சித்தனர். சாதாரண மாணவர்கள் தடியடி மற்றும் கண்ணீர்ப்புகைக் குண்டுகளால் காயமடைந்த சூழலில், நிர்வாகிகள் ஹோட்டலில் கொண்டாடுவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இந்த விமர்சனங்களுக்குப் பதிலளித்த சௌரவ் தாஸ், தற்கால இளைஞர்களின் போராட்ட முறையையும் சிந்தனையையும் பழைய தலைமுறையினரால் புரிந்து கொள்ள முடிவதில்லை என்று தெரிவித்தார். தங்களால் சாலையில் அமர்ந்து போராடவும் முடியும், அதே நேரத்தில் நடனமாடியபடியே உரிமைகளைக் கேட்கவும் முடியும் எனக் குறிப்பிட்ட அவர், போராட்டக் களத்தில் கைது செய்யப்பட்ட மாணவர்கள் மீதான வழக்குகளைத் திரும்பப் பெறுதல் உள்ளிட்ட பல கோரிக்கைகள் ஏற்கப்பட்ட பிறகே போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டதாகக் கூறினார்.