Categories: சினிமா

விஷ்ணு கிட்ட லவ் சொன்னதுக்கு எங்க அப்பா… காதல் விஷயம் குறித்து மனம் திறந்த சௌந்தர்யா..!

Spread the love

பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நேற்றோடு முடிவடைந்து விட்டது . 100 நாட்களை வெற்றிகரமாக இந்த சீசன் டாக்சிக் இல்லாத சீசன் என்று பெயர் பெற்றிருக்கிறது. மற்ற சீசன்களைப் போல் இல்லாமல் ஒருவரை ஒருவர் புறம் பேசிக் கொண்டும் இல்லாமல் அனைவரும் விளையாட்டு முனைப்போடு விளையாடினார்கள். மற்ற சீசன்களை விட இந்த சீசன்களில் பல ட்விஸ்ட்டுகள் இருந்தது. ஆரம்பமே கேர்ள்ஸ் வெர்சஸ் பாய்ஸ் என்று தான் இந்த சீசன் தொடங்கியது. அதற்குப் பிறகு சீசன் நடுப்பகுதியில் அனைவரும் ஒன்றாக விளையாடலாம் என்று கூறிவிட்டார் பிக் பாஸ்.

அதே போல் கடந்த வாரம் பணப்பெட்டி டாஸ்க் கூட இதுவரை எந்த சீசன்களில் இல்லாத அளவுக்கு வித்தியாசமாக நடைபெற்றது. 24 போட்டியாளர்கள் உள்ளே வந்து டாப் 5 போட்டியாளர்களாக முத்துக்குமரன், விஷால், சௌந்தர்யா, பவித்ரா, ரயான் ஆகியோர்  இருந்தார்கள். இதில் ரயான் முதலாவதாக எலிமினேட் ஆனார். பின்பு பவித்ரா எலிமினேட் ஆனார். கடைசியாக விஷால் எலிமினேட் செய்யப்பட்டார்.

இறுதியில் முத்துக்குமரன் மற்றும் சௌந்தர்யா இரண்டு பேரும் மேடையில் இருந்த நிலையில் முத்துக்குமரன் winner ஆகவும், சௌந்தர்யா Runner ஆகவும் வெற்றி பெற்றுள்ளார்கள். வீட்டிற்குள் இருக்கும்போது சௌந்தர்யா நீண்ட நாள் நண்பர் விஷ்ணு வீட்டிற்குள் வந்தார். அப்போது சௌந்தர்யா அவருடைய காதலை சொன்னார். விஷ்ணுவும் ஏற்றுக்கொண்டார். இந்நிலையில் நிகழ்ச்சி முடிந்து வெளியே வந்த சௌந்தர்யா அளித்துள்ள பேட்டியில், “எங்க வீட்டுல எங்க அப்பா எல்லாரும் ஓகே சொல்லிட்டாங்க.

எனக்கு முதன்முதலா அவன்கிட்ட புரபோஸ் பண்ணுறப்ப ஒரு மாதிரி பீல் இருந்துச்சி. எங்க வீட்ல எல்லாருக்கும் எனக்கு அவனை பிடிக்கும்னு தெரியும். என்னோட லவ் மனசுக்குளே வைக்கறதுக்கு அவன்கிட்ட சொல்லிடலாம்னு நினச்சேன். அதான் நேரம் பார்த்து சொல்லிட்டேன். சீக்கிரம் குட் நியூஸ் நடக்கும்” என்று கூறியுள்ளார்.

Soundarya

Recent Posts

மெகா ட்விஸ்ட்!… வானத்திலிருந்து கொட்டிய பணமழை… ரூ.81,800 பணக்கட்டை பறித்து மரத்தில் ஏறிய குரங்கு… அள்ள முண்டியடித்த மக்கள்… வைரலாகும் வீடியோ…!!

சிம்லாவில் அமைந்துள்ள துணை ஆணையர் அலுவலக வளாகத்தில் எதிர்பாராத விதமாகத் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. வங்கியில் பணத்தைச் செலுத்துவதற்காக ஒருவர்…

7 மணத்தியாலங்கள் ago

அய்யயோ..! மனைவியை காணவில்லை என புகார்… பூட்டிய அறைக்குள் நடந்த மர்மம்… லாட்ஜ் அறையில் சடலமாக மீட்கப்பட்ட பெண்… பின்னணி என்ன?…!!

விஜயவாடா கிருஷ்ணலங்கா பகுதியில் உள்ள ராமையா தங்கும் விடுதி அறையில், பைடிசெட்டி எர்ரம்மா என்ற பெண் மர்மமான முறையில் கொலை…

7 மணத்தியாலங்கள் ago

வீடு புகுந்த மர்ம நபர்கள்… நொடியில் நகைகள் அபேஸ்… பெண்களை மயக்கமடைய செய்து துணிகர கொள்ளை… அரங்கேறிய திடுக்கிடும் சம்பவம்…!!

வாரங்கல் நகரின் கரிமாபாத் பகுதியில் பட்டப்பகலில் ஐயப்ப பக்தர்கள் போல் வேடமணிந்து வந்த இருவர், பெண்களுக்கு மயக்க மருந்து கொடுத்து…

8 மணத்தியாலங்கள் ago

இப்படியொரு பழிவாங்கலா?… வேடிக்கை பார்க்கிறதா காவல்துறை?… தாக்கி வீட்டு வாசலில் வீசப்பட்ட இளைஞர்… சிசிடிவியில் சிக்கிய கொடூர முகம்…!!

நவம்பர் 10-ம் தேதி குருகிராமில், முன்பகை காரணமாக நிதின் என்ற 25 வயது இளைஞர் கும்பல் ஒன்றால் கொடூரமாகத் தாக்கப்பட்ட…

8 மணத்தியாலங்கள் ago

இப்படியொரு நிலையா?… “அவை இல்லாமல் என்னால் வாழ முடியாது”… செல்ல பிராணிகளை பிரிந்து கதறி அழுத பாலிவுட் நடிகர்…!!

பாலிவுட் நடிகர் சரத் கபூர், தனது குடும்பத்தைப்போல வளர்த்து வந்த நான்கு செல்லப் பிராணிகளான நாய்களை மும்பையில் உள்ள விலங்குகள்…

8 மணத்தியாலங்கள் ago

திக்… திக்… சாதி மறுப்பு காதலால்… தீபாவளி இரவில் பெற்ற மகளை… துப்பட்டாவால் கழுத்தை நெரித்துக் கொன்ற தந்தை… குலை நடுங்கவைக்கும் அதிர்ச்சி சம்பவம்…!!

குஜராத் மாநிலம் ஆனந்த் மாவட்டத்தில் உள்ள மேட்பூர் கிராமத்தில், சாதி மறுப்பு காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து 21 வயது மகளைத்…

8 மணத்தியாலங்கள் ago