மக்கள் செல்வன் விஜய் சேதுபதி அவர்களை மாஸ் ஹீரோவாக உயர்த்திய படம் சூது கவ்வும். அந்த படத்திற்கு முன்னர் வரை தென்மேற்கு பருவக்காற்று, பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் என வித்தியாசமான கதைக்களம் கொண்ட படங்களில் நடித்து வந்தார். இவரை ஒரு கெத்தான ரோலில் காட்டிய படம் என்றால் அது சூது கவ்வும் படம் தான். இந்த படத்தை நலன் குமாரசாமி இயக்கியிருந்தார் .
இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்திருந்தார். இந்த படம் மாபெரும் வெற்றியடைந்தது. இந்த வெற்றிக்கு பின்னர் சூத்து கவ்வும் இரண்டாம் பாகத்தை தயாரிப்பாளர் சிவி குமார், அதில் மிர்ச்சி சிவாவை ஹீரோவாக நடிக்க வைத்தார். இந்த படத்தை புதுமுகம் இயக்குனர் அர்ஜுன் இயக்கி உள்ளார். கடத்தலை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தில் கருணாகரன், சஞ்சிதா செட்டி ஆகியோர் நடித்துள்ளார்கள்.
இந்த படம் நேற்று திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது. இதற்கிடையில் புஷ்பா 2 படம் தமிழ்நாட்டில் வசூலை சக்க போடு போட்டு வரும் நிலையில் அதற்கு போட்டியாக இந்த படம் ரிலீஸ் ஆனாலும் தற்போது தமிழ்நாட்டில் மழை வருவதால் சூது கவ்வும் படத்தின் முதல் நாள் வசூல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த படம் ரிலீஸ் ஆன முதல் நாளில் வெறும் 45 லட்சம் மட்டுமே வசூல் செய்துள்ளது. புஷ்பா 2 படத்தில் நேற்றே வசூலை விட இது மிகவும் கம்மி என்று கூறப்படுகிறது . மேலும் இன்றும் நாளையும் விடுமுறை தினம் என்பதால் இந்த இரண்டு நாட்களில் அந்த படம் பாக்ஸ் ஆபிஸில் பிக் கப் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI), ஆதார் அட்டை வைத்திருப்பவர்கள் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை தங்களின் அடையாள மற்றும் முகவரிச்…
உலக நாடுகளின் இயற்கை வளங்களைச் சுரண்டி, அந்தப் பணத்தை மக்கள் நலனுக்குப் பயன்படுத்தாமல் ஆயுதங்களில் முதலீடு செய்யும் உலகத் தலைவர்களைப்…
சேலம் மாவட்டத்தின் நட்சத்திரத் தொகுதியான எடப்பாடியில், வரும் ஏப்ரல் 23 சட்டமன்றத் தேர்தலில் சுமார் 61,000 இளம் வாக்காளர்கள் வெற்றியாளரைத்…
டெல்லி ஐஐஐடியில் பட்டம் பெற்ற 24 வயது இளைஞர் சிராஜ் மதன், ஆண்டுக்கு 17 லட்சம் ரூபாய் ஊதியம் தரும்…
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான விரிவான தேர்தல் அறிக்கையை இன்று சென்னையில் வெளியிட்டார். திருக்குறளின்…
மிகவும் கனமான மற்றும் வேதனையான ஒரு விஷயத்தைப் பகிர்ந்துள்ளீர்கள். ஒரு பூஜை வழிபாட்டிற்காகத் தனது ஆரோக்கியத்தைப் பணையம் வைத்து, 18…