#image_title
பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமானவர் சரவணன் விக்ரம். தற்போது சினிமாவில் ஹீரோவாக அறிமுகம் ஆகியுள்ளார் .பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலமாக பிரபலமானவர்கள் ஏராளமாக இருந்தாலும் அவர்கள் சினிமாவில் அடுத்தடுத்த உயரங்களை எட்டியவர்கள் ஒரு சிலர்தான். குறிப்பாக பிக் பாஸ் முதல் சீசனில் போட்டியாளராக கலந்து கொண்ட ஹரிஷ் கல்யாண் தற்போது சினிமாவில் அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்து நம்பிக்கை நட்சத்திரமாக மாறியுள்ளார்.
இவர் நடிப்பில் வெளியான லப்பர் பந்து திரைப்படம் நல்ல வரவேற்பு பெற்றது. அதேபோல பிக் பாஸ் முதல் சீசனில் டைட்டில் வின்னரான ஆரவ் தமிழ் சினிமாவில் வில்லனாக கலக்கி வருகிறார் இதனைத் தொடர்ந்து மகிழ் இயக்கத்தில் உருவாகி வரும் விடாமுயற்சி படத்தில் அஜித்துக்கு வில்லனாக நடித்துள்ளார். இதனை தொடர்ந்து பிக் பாஸ் மூலமாக பேமஸான ஹீரோ என்றால் அது கவின் தான்.
இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு டாடா படத்தில் வெற்றிக்கு பிறகு நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்துள்ளார். பிளேடி பெக்கர் படத்திலும் நடித்து பிரபலமானார். அந்த வரிசையில் சினிமாவில் இணையும் முனைப்போடு தற்போது தமிழ் சினிமாவில் ஹீரோவாக களம் இறங்கி இருப்பவர் சரவணன் விக்ரம்.
#image_title
இவர் கடந்த ஆண்டு நடைபெற்ற பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மிகப்பெரிய அளவில் ட்ரோல் செய்யப்பட்டார். அவர் ஹீரோவாக நடித்துள்ள முதல் படத்தை பிரவீன் கே. மணி என்ற புதுமுக இயக்குனர் இயக்க உள்ளார். இந்த படத்தில் சரவணனுக்கு ஜோடியாக ஹசிலி என்பவர் நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையோடு தொடங்கியுள்ளது. தளபதி விஜய் போல் ரில்ஸ் வீடியோக்களை வெளியிடும் இவருடைய இவர் அடுத்த தளபதியாக உருவேடுக்கிறாரா என்பது பொறுத்திருந்து பார்க்கலாம்.
இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI), ஆதார் அட்டை வைத்திருப்பவர்கள் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை தங்களின் அடையாள மற்றும் முகவரிச்…
உலக நாடுகளின் இயற்கை வளங்களைச் சுரண்டி, அந்தப் பணத்தை மக்கள் நலனுக்குப் பயன்படுத்தாமல் ஆயுதங்களில் முதலீடு செய்யும் உலகத் தலைவர்களைப்…
சேலம் மாவட்டத்தின் நட்சத்திரத் தொகுதியான எடப்பாடியில், வரும் ஏப்ரல் 23 சட்டமன்றத் தேர்தலில் சுமார் 61,000 இளம் வாக்காளர்கள் வெற்றியாளரைத்…
டெல்லி ஐஐஐடியில் பட்டம் பெற்ற 24 வயது இளைஞர் சிராஜ் மதன், ஆண்டுக்கு 17 லட்சம் ரூபாய் ஊதியம் தரும்…
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான விரிவான தேர்தல் அறிக்கையை இன்று சென்னையில் வெளியிட்டார். திருக்குறளின்…
மிகவும் கனமான மற்றும் வேதனையான ஒரு விஷயத்தைப் பகிர்ந்துள்ளீர்கள். ஒரு பூஜை வழிபாட்டிற்காகத் தனது ஆரோக்கியத்தைப் பணையம் வைத்து, 18…