அரசியலிலும் சரி, சினிமாவிலும் சரி இரண்டிலும் விஜயகாந்த் தனித்துவமான இடத்தை பெற்றுள்ளார். படத்தில் இருப்பது போலவே நிஜத்திலும் ஏழை மக்களுக்கு நிறையவே உதவிச் செய்துள்ளார். விஜயகாந்த் அவர்களை மக்கள் கேப்டன் என்று அன்போடு அழைத்து வந்தனர். இன்று ஆகஸ்ட் 25ஆம் தேதி விஜயகாந்த் அவர்களின் பிறந்த நாள்.என்னதான் பூமியில் இருந்து மறைந்தாலும் , மக்களின் மனதிலே குடியிருக்கிறார் இன்று வரை. இவருடைய பிறந்தநாளை ரசிகர்கள் ஏழை எளிய மக்களுக்கு உதவிகளை செய்து கொண்டாடி வருகிறார்கள்.
கேப்டன் பிறந்தநாளை முன்னிட்டு கிட்டத்தட்ட 10000 க்கும் மேற்பட்டோருக்கு கேப்டன் ஆலயத்தில் அன்னதானம் 🔥#HBDCaptainVijayakanth #HappyBirthdayCaptain pic.twitter.com/d0KdGfKu4A
— Nandhan Talkz ✨ (@Nandhan_Talkz) August 25, 2025
இந்நிலையில் விஜயகாந்தின் 71-வது பிறந்தநாளை முன்னிட்டு இன்று 10,000-க்கும் மேற்பட்டோருக்கு சென்னை கேப்டன் ஆலயத்தில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. அன்னதானத்தை விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் உணவு பரிமாறி தொடங்கி வைத்தார். இது குறித்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
