வெளிநாடுகளில் கைநிறைய சம்பாதிக்கும் பிள்ளைகள் இருந்தும், ஒரு வயதான தாய் தெருவில் பிச்சை எடுக்கும் அவலம் நவீன இந்தியாவின் ஒரு இருண்ட பக்கத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. தருண் மிஸ்ரா மற்றும் அவரது குழுவினர் மேற்கொண்ட ஆய்வில், ஒரு பாட்டி நீண்ட காலமாக தெருவில் யாசகம் பெற்று வந்ததும், அவரது மகன் வெளிநாட்டில் வசதியாக வாழ்ந்து வருவதும் தெரியவந்தது.
மேலும் வறுமையினால் பிச்சை எடுப்பவர்களை விட, பெற்ற பிள்ளைகளால் கைவிடப்பட்டு, ஒருவேளை உணவிற்காக வீதிக்கு தள்ளப்படும் முதியவர்களின் நிலை மிகவும் கொடுமையானது. “பெற்றோரை பாரமாக கருதும்” மனநிலை சமூகத்தில் அதிகரித்து வருவதையே இந்தச் சம்பவம் உணர்த்துகிறது.
🚨 Tearful Truth: Children Abroad, Mother Begging on Streets? Is This the Reality of Modern India?
A grandmother used to beg, and Tarun Mishra’s team noticed them.
When Tarun Mishra investigated, locals revealed that her son lives abroad.
Beggars aren’t always… pic.twitter.com/qV9RaA5ZrP
— Ramesh Tiwari (@rameshofficial0) March 6, 2026
“>
இதனால் உள்ளூர் மக்களின் உதவியுடன் உண்மை கண்டறியப்பட்ட பிறகு, அந்தப் பாட்டி தற்போது ஒரு முதியோர் இல்லத்தில் பாதுகாப்பாகச் சேர்க்கப்பட்டுள்ளார். பிச்சை எடுக்கும் ஒவ்வொருவரும் ஏழைகள் அல்ல சில நேரங்களில் அவர்கள் பிள்ளைகளின் அலட்சியத்தால் தங்களின் கண்ணியத்தை இழக்க நேரிடுகிறது.
இந்நிலையில் சட்டம் மற்றும் சமூக அமைப்புகள் இத்தகைய முதியவர்களுக்கு பாதுகாப்பு வழங்கினாலும், பெற்ற பிள்ளைகளின் அன்பிற்கும் கவனிப்பிற்கும் ஈடாக எதுவும் இருக்க முடியாது. இந்தச் சம்பவம், நம்மைச் சுற்றியுள்ள முதியவர்களின் நிலையை ஒரு நிமிடம் சிந்தித்துப் பார்க்க வைக்கிறது.
