“காசு கேட்டா உன்னால தர முடியாதா, அப்போ செத்துடு”… தாய் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்து கொளுத்திய மகன்… பயங்கர அதிர்ச்சி சம்பவம்…!

Spread the love

ஒடிசா மாநிலம் பத்ரக் மாவட்டத்தை சேர்ந்த டேபாஷிஷ் நாயக் (45) என்பவர் மது மற்றும் போதைப்பொருள் பழக்கத்திற்கு அடிமையானவர். அவருடைய தாய் (65) தனது சேமிப்பு பணத்தை அடிக்கடி மகனிடம் கொடுத்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று தனது தாயிடம் மது குடிப்பதற்காக டேபாஷிஷ் பணம் கேட்டு தொந்தரவு செய்துள்ளார். அப்போது தாய் தன்னிடம் பணம் இல்லை என்று கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவர் தன்னுடைய தாயின் உடலில் பெட்ரோலை ஊற்றி தீயை வைத்துள்ளார்.

இதனால் உடல் முழுவதும் தீ பற்றி எரிந்த நிலையில் வலியால் அவர் அலறி துடித்தார். இதனைக் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவசர அவசரமாக ஓடி வந்து பார்த்தபோது அவர் தீயில் எரிந்து கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். ஆனால் அவர்கள் வருவதற்குள் டேபாசிஷ் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார். இதனைத் தொடர்ந்து பலத்தை தீக்காயங்களுடன் தாய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தப்பியோடிய மகனை தீவிரமாக தேடி வருகிறார்கள்.

Nanthini

Recent Posts

“2012-ல் செங்கோட்டையன் பதவி பறிபோனது ஏன்?”… மனைவியே கொடுத்த புகாரா?…. உண்மையை அவிழ்த்துவிட்ட எடப்பாடி ….!

2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் தற்போதே அனல் பறக்கத் தொடங்கியுள்ள நிலையில், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் (EPS),…

2 minutes ago

FLASH NEWS: வீட்டு கேஸ் சிலிண்டர் இனி 5 நாள்களில் டெலிவரி… காலையிலேயே குட் நியூஸ்…!

தமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகம் தற்போது மீண்டும் சீராகத் தொடங்கியுள்ளது பொதுமக்களிடையே நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக முன்பதிவு செய்த…

12 minutes ago

தேர்தல் நேரத்தில் தவித்த தவெக… “பத்திரிகையாளர்களை சந்திக்கபோவதில்லை” சங்கீதாவின் திடீர் மன மாற்றம்.. மகிழ்ச்சியில் விஜய்..!!

தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் நடிகருமான விஜய் மீது அவரது மனைவி சங்கீதா தொடர்ந்துள்ளதாகக் கூறப்படும் விவாகரத்து வழக்கு, வரும்…

14 minutes ago

நள்ளிரவு 1 மணி..! மகளுக்காக ரயில் நிலையத்தில் தந்தை செய்த செயல்… இந்த பாக்கியம் யாருக்கு கிடைக்கும்..? நெகிழ்ச்சியில் பூரித்து போன இணையவாசிகள்..!!

பெண்கள் தங்கள் தந்தையிடம் எப்போதும் செல்லக் குழந்தையாகவே இருப்பார்கள் என்பதை இந்த வீடியோ உணர்த்துகிறது. ஜோத்ஸ்னா என்ற பெண், நள்ளிரவு…

19 minutes ago

“என்ன கொடுமை சார் இது..!” தலையில் வாட்டர் டேங்க்கோடு சுற்றும் மாடு… என்ன காரணம் தெரியுமா..? வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!

அலிகார் சந்தைப் பகுதியில் சுற்றித் திரிந்த காளை ஒன்று, தண்ணீர் குடிப்பதற்காக அங்கிருந்த ஒரு பிளாஸ்டிக் தண்ணீர் தொட்டிக்குள் (Water…

24 minutes ago