உச்சகட்ட கொடூரம்…! தந்தையின் தலையை தரையில் மோதி கொன்ற மகன்… நடுரோட்டில் அரங்கேறிய பயங்கரம்… பகீர் பின்னணி…!!

By Devi Ramu on கார்த்திகை 12, 2026

Spread the love

ஈரோட்டில் குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் பெற்ற தந்தையின் தலையைப் பிடித்துத் தரையில் பலமாக மோதிக் கொன்ற மகனை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு புதுமை காலனி சென்டர் தியேட்டர் அருகில் வசித்து வந்தவர் அப்துல் ரஹீம் (75). பூ வியாபாரம் செய்து வந்த இவருக்கு மூன்று மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். இவர்களது மூன்றாவது மகன் சபிக் (37), இருசக்கர வாகனப் பட்டறையில் கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 8 மாதங்களாகப் பிரிந்து வாழ்ந்து வரும் சபிக், தனது தந்தை அப்துல் ரஹீமின் வீட்டிலேயே தங்கி வந்துள்ளார்.

   

மது அருந்தும் பழக்கம் கொண்ட சபிக், தினமும் போதையில் வந்து தனது தந்தையிடம் தகராறு செய்வதை வாடிக்கையாகக் கொண்டுள்ளார். இந்நிலையில், சம்பவத்தன்று வழக்கம்போல் கடுமையான குடிபோதையில் வீடு திரும்பிய சபிக், தந்தை அப்துல் ரஹீமிடம் மீண்டும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இருவருக்கும் இடையே தகராறு முற்றிய நிலையில், ஆத்திரத்தின் உச்சத்திற்குச் சென்ற சபிக், தனது வயதான தந்தை என்றும் பாராமல் அவரது தலையைப் பிடித்து நடுரோட்டிலும் வீட்டிற்குள்ளும் தரைமட்டமாக மோதித் தாக்கியுள்ளார்.

   

இந்தத் தாக்குதலில் படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் மிதந்த அப்துல் ரஹீமை அப்பகுதி மக்கள் மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்தச் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த ஈரோடு தெற்கு காவல் நிலைய போலீசார், தந்தையைக் கொன்ற சபிக்கைக் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.