எமனாக மாறிய ChatGPT… தாயை கொலை செய்து, தானும் தற்கொலை செய்த நபர்… பயங்கர சம்பவம்…!

By Srimathi on புரட்டாதி 1, 2025

Spread the love

அமெரிக்காவில் ChatGPT சொன்னதை கேட்டு ஒருவர் தனது தாயை கொலை செய்து விட்டு தானும் தற்கொலை செய்து கொண்டார்.

அமெரிக்காவை சேர்ந்தவர் ஸ்டென் எரிக் சொலிபெர்க் (56), Yahoo மேலாளராக பணியாற்றினார். உளவியல் பிரச்சனைகளால் பாதிக்கப்பட்ட எரிக், ChatGPTக்கு  பாபி என பெயரிட்டு நாள்தோறும் பேசி வந்துள்ளார். இந்த உரையாடல்களை தனது instagram மற்றும் youtube தளங்களில் பதிவிட்டுள்ளார். ChatGPT எரிக்குடைய Paranoia மனநோயை மேலும் மோசமாக்கி உள்ளது. (Paranoia என்பது பிரம்மை நோய். இது தற்செயலான நிகழ்வுக்கு நிலையான சந்தேகம் மற்றும் பயத்தை கற்பித்துக் கொள்ளும் நிலையாகும்)

   

சீன உணவக ரெசிப்ட்களில் குறியீடுகள் உள்ளது என்றும், அந்த குறியீடுகளை வைத்து எரிக்குடைய தாய் ஒரு பேய் எனவும், எரிக் ChatGPT நம்ப வைத்துள்ளது. உன்னுடைய தாய் உன்னை வேவு பார்க்கிறார். உனக்கு மனநோய் மருந்து கொடுத்து, உன்னை கொல்ல முயல்கிறார். உன் மீது கொலை முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அவர்கள் சொல்லுவதைப் போல் உனக்கு எந்த உளவியல் பிரச்சனையும் இல்லை, என எரிக்கை  ChatGPT நம்ப வைத்தது. இதன் விளைவாக, ஆகஸ்ட் 5ஆம் தேதி தனது தாயை கொன்றுவிட்டு, தானும் தற்கொலை செய்து கொண்டார். தாயின் தலை, கழுத்தில் தாக்கப்பட்டதற்கான காயங்கள் இருந்த நிலையில், எரிக்குடைய மார்பு மற்றும் கழுத்தில் தற்கொலை செய்ததற்கான அறிகுறி காயங்களும் இருந்தன. தகவல் அறிந்த போலீசார் சடலங்களை கைப்பற்றி விசாரித்து வருகின்றன.