மாமியாரை வாழ்த்திய மருமகன்… இயக்குனர் விக்னேஷ் சிவன் நயன்தாரா அம்மாவிற்கு கூறிய பிறந்தநாள் வாழ்த்து…. என்ன சொன்னார் என்று தெரியுமா உங்களுக்கு…..

By Begam on புரட்டாதி 14, 2022

Spread the love

இயக்குனர் விக்னேஷ் சிவன் நயன்தாராவின் அம்மாவான ஓமனா குரியனை  பாசத்துடன் கட்டிப்பிடித்து, நெற்றியில் முத்தமிடுவது போல புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை  கூறியுள்ளார்.

   

நடிகை நயன்தாரா விக்னேஷ் திருமணம் மகாபலிபுரத்தில் உள்ள ஒரு தனியார் ரிசார்ட் ஒன்றில்  பிரமாண்டமாக நடைபெற்றது. இத்திருமணத்தில் திரையுலக பிரபலங்கள் பலர்  கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். திருமணம் முடிந்த இவர்கள் ஜோடியாக கேரளாவிற்கு சென்றனர்.

   

நயன்தாராவின் குடும்பத்தினர் இவர்களுக்கு விருந்து வைத்ததாக கூறப்பட்டது. தற்பொழுது மற்றொரு காரணமும் வெளியாகி  உள்ளது. நயன்தாராவின் பெற்றோர்கள் உடம்பு சரியில்லாத காரணத்தினால் திருமணத்தில் கலந்து கொள்ளவில்லை என்றும்  அவர்களை பார்ப்பதற்காக அவர்கள் கேரளாவிற்கு சென்றதாகவும் கூறப்பட்டது.

 

இந்த நிலையில் இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது இணையதள பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு மொத்த சர்ச்சைகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். அதில் அவர் நயன்தாராவின் அம்மா ஓமனா குரியனை கட்டியணைத்து நெற்றியில் முத்தமிடுவது போல புகைப்படம் அமைந்துள்ளது. அப்பதிவில் விக்னேஷ் சிவன் மேலும் கூறியுள்ளதாவது, ‘அன்புள்ள ஓமனா குரியன் அவர்களுக்கு , உங்களுக்கு என்னுடைய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.. நீங்கள் என்னுடைய இரண்டாவது தாய். நீங்கள் எப்போதும் என்னை தூய மனதுடன் வாழ்த்த கூடியவர். உங்களுடைய ஆரோக்கியத்திற்காகவும், மன அமைதிக்காகவும், மகிழ்ச்சிக்காகவும் நான் இறைவனிடம் எப்போதும் பிரார்த்திப்பேன்’. இவ்வாறு அதில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Vignesh Shivan (@wikkiofficial)