சென்னை புளியந்தோப்பு கேபி பார்க் பகுதியில் உஷா என்பவர் வசித்து வரும் நிலையில் இவருக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளன. மகள் ரோஜாவை வெற்றிவேல் என்பவருக்கு திருமணம் செய்து வைத்த நிலையில் கணவன் மனைவி இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ரோஜா கணவரை பிரிந்து தன் தாயார் வீட்டில் வசித்து வருகின்றார். இதனிடையே வெற்றிவேல் அடிக்கடி குடித்துவிட்டு தனது மனைவியை குடும்பம் நடத்த வருமாறு புளியந்தோப்பு பகுதிக்குச் சென்று சண்டை போட்டுள்ளார்.
தினம் தினம் அப்படியே செய்து வந்த நிலையில் தனது மாமியார் வீட்டுக்கு வந்த வெற்றிவேல் தனது மனைவியை மீண்டும் குடும்பம் நடத்த வருமாறு அழைத்துள்ளார். அப்போது ஏற்பட்ட பிரச்சனையில் வெற்றிவேலுவுக்கும் ரோஜாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகளப்பாக மாறியது. ஒரு கட்டத்தில் வெற்றிவேல் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து தனது மனைவி ரோஜாவை வெட்ட வரும்போது அவருடைய தாய் உஷா அதை தடுக்க முயன்ற நிலையில் உஷாவுக்கு இடது கையில் சரமாரியாக வெட்டு விழுந்தது.
இதனால் அவருடைய இடது கை மணிக்கட்டு உடைந்து கதறிய நிலையில் ரோஜாவையையும் சரமாரியாக தாக்கி விட்டு வெற்றிவேல் அங்கிருந்து தப்பி சென்று விட்டார். உடனே இது குறித்து தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் வெற்றிவேலை கைது செய்தனர். அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
