என்ன ஒரு பித்தலாட்டம்?… உயிரிழந்த தாயின் உடலை 3 வருடங்களாக வீட்டிலேயே வைத்து… ஓய்வூதியம் பெற மகன் செய்த தில்லாலங்கடி வேலை…!

Spread the love

இத்தாலியின் போர்கோ விர்ஜிலியோ பகுதியை சேர்ந்த 56 வயதான நபர் ஒருவர் இறந்த தன்னுடைய தாய்போல வேடமிட்டு அவருடைய ஓய்வூதிய தொகையைப் பெற்று மோசடி செய்து வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த நபரின் தாய் கலந்த 2022 ஆம் ஆண்டு தன்னுடைய 82 வயதில் உயிரிழந்து விட்டார். ஆனால் அவருடைய ஓய்வூதிய தொகையை தொடர்ந்து பெறவேண்டும் என்று நினைத்த மகன் தனது தாயின் மரணத்தை அரசுக்கு தெரிவிக்காமல் உடலை பதப்படுத்தி வீட்டில் மறைத்து வைத்துள்ளார். அதன் பிறகு தனது தாயைப் போல வேடமிட்டு ஓய்வூதியத்தை பெற்று வந்துள்ளார்.

இதனிடையே அரசு அலுவலகத்தில் தாயின் அடையாள அட்டையை புதுப்பிக்க அந்த நபர் பெண் வேடத்தில் சென்றுள்ளார். அப்போது அவர் மீது ஊழியருக்கு சந்தேகம் ஏற்பட்ட நிலையில் அந்த நபரின் கைகளில் உள்ள தோல் 85 வயது முதியவரின் தோற்றத்தைப் போல இல்லை என்பதையும் சுருக்கங்கள் விசித்திரமாக இருப்பதையும் கவனித்துள்ளார். உடனே போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் விசாரித்த போது தாயைப் போல வேடமிட்டு 80 லட்சம் ஓய்வூதியத்தை பெற்று மோசடி செய்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து அந்த நபரை கைது செய்த போலீசார் வீட்டில் பதப்படுத்தி வைக்கப்பட்டிருந்த அவருடைய தாயின் உடலையும் கைப்பற்றினர்.

Nanthini

Recent Posts

BREAKING: கனிமவளங்கள் கடத்தல்.. முதல்வர் விஜய்யின் அதிரடி உத்தரவு…!!

தமிழகத்தில் சட்டவிரோதமாக கனிமவளங்கள் கடத்தப்படுவதைத் தடுப்பதற்குத் தேவையான கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு முதலமைச்சர் விஜய் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.…

2 மணத்தியாலங்கள் ago

பறவையே உஷார்… “இது வாலு இல்ல, மரண வில்லன்” – நெட்டிசன்களை அதிரவைத்த வைரல் வீடியோ… அம்மாடியோ பயங்கரமா இருக்கே..!!

ஈரானியப் பாலைவனத்தின் பாறைகளுக்கு மத்தியில் காணப்படும் அரிய வகை பாம்பான 'சிலந்தி வால் கொம்பு விரியன்' (Spider-tailed horned viper),…

2 மணத்தியாலங்கள் ago

இரத்தக் கடலாக மாறிய கடற்கரை.. பாரம்பரியம் என்ற பெயரில் 700 திமிங்கிலங்கள், டால்பின்கள் கொடூர வேட்டை… உலகையே உலுக்கிய கொடூரம்..!!

ஃபாரோ தீவுகளில் (Faroe Islands) ஆயிரம் ஆண்டுகள் பழமையான பாரம்பரிய வழக்கமான 'கிரைண்டாட்ராப்' (Grindadráp) என்ற நிகழ்வின்படி, 700-க்கும் மேற்பட்ட…

3 மணத்தியாலங்கள் ago

“இனி இப்படித்தான்” வங்கிகளில் கோல்டு லோன்… RBI வங்கியின் அதிரடி அறிவிப்பு..!

வங்கிகளில் தங்கக் கடன் (Gold Loan) பெறுவதற்கான வரம்புகளை இந்திய ரிசர்வ் வங்கி (RBI) மாற்றியமைத்துள்ளது. இத்துடன் தங்கத்தின் மதிப்பீட்டை…

3 மணத்தியாலங்கள் ago

பாவம்..! நடுரோட்டுல அனாதையா நிக்குறாரு விஜயபாஸ்கர்..எங்கே போறதுன்னு தெரியாம… திமுக அமைச்சர் ரகுபதி உருக்கம்..!!

தமிழகத்தில் தவெக ஆட்சி அமைக்க ஆதரவளிக்க முயன்ற அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீண்டும் எடப்பாடி பழனிசாமி அணிக்குத் திரும்பியுள்ள நிலையில்,…

3 மணத்தியாலங்கள் ago

டிவி சேனல் தொடங்கும் முதல்வர் விஜய்… நிதி மற்றும் நிர்வாகப் பொறுப்பில் ஆதவ் அர்ஜுனா..!!

தமிழக வெற்றி கழகத்தின் (தவெக) தலைவரும், தமிழக முதலமைச்சருமான விஜய், தனது கட்சியின் கொள்கைகளையும், மக்கள் நலத் திட்டங்களையும் மாநிலம்…

3 மணத்தியாலங்கள் ago