ராஜஸ்தான் மாநிலம் கோட்டா நகரில் ஹரிஓம் நகர் குடிசை பகுதியில் 50 வயதான தொழிலாளி பூரி லால் பைரவா வசித்து வந்துள்ளார். இவர் பக்கவாதத்தால் கடந்த செவ்வாய்க்கிழமை உயிரிழந்த நிலையில் இவருடைய திடீர் மரணம் குடும்பத்தினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியது. தந்தையின் இறுதி சடங்கு முடிந்த இரண்டு மணி நேரத்தில் 25 வயதான மகன் ராஜு பைரவா திடிரென்று மாரடைப்பால் உயிரிழந்தார். தந்தை மற்றும் மகன் இருவரும் ஒரே நாளில் உயிரிழந்ததால் அந்த ஏழை குடும்பம் மிகுந்த வேதனையில் உள்ளது.
இறுதி சடங்கு செலவுக்கு கூட தேவையான பணம் இல்லாததால் அக்கம் பக்கத்தினர் பணம் திரட்டி இருவரின் இறுதி சடங்குகளையும் செய்தனர். இந்த மனிதாபிமான செயல் அப்பகுதி மக்களின் ஒற்றுமையை வெளிப்படுத்துகிறது. தன் கணவனையும் மகனையும் ஒரே நாளில் இழந்த பூரி லாலின் மனைவி குட்டி துயரத்தில் கதறி அழுகின்றார். இவர்களின் 13 வயதான மகன் அரவிந்த் சிறுவயதிலேயே பேரிழப்பை சந்தித்துள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
