அரிய நெருப்பு வளைய சூரிய கிரகணம் 178 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று நிகழ உள்ளது. பூமிக்கும் சூரியனுக்கும் இடையே சந்திரன் கடந்து செல்லும்போது சூரியனின் முகத்தை ஓரளவு மறைக்கும். அப்படி மறைக்கும் போது வானில் ஒரு ஒளிரும் வளையம் அல்லது நெருப்பு வளையத்தை உருவாக்கும். இந்த நிகழ்வு பெரும்பாலும் நெருப்பு வளையம் என அழைக்கப்படுகிறது.
அக்டோபர் 14-ஆம் தேதி இன்று உலகின் பல்வேறு பகுதிகளில் நெருப்பு வளைய கிரகணம் தோன்றும். இந்நிலையில் சந்திரன் சூரியனை முற்றிலுமாக தடுக்கும் முழு சூரிய கிரகணத்தை போல் இல்லாமல், சந்திரன் சுற்றுப்பாதையில் பூமியிலிருந்து தொலைதூரப் புள்ளியில் அல்லது அதற்கு அருகில் இருக்கும் போது ஒரு வளைய சூரிய கிரகணம் ஏற்படுகிறது.
சந்திரன் சூரியனை முழுமையாக மறைக்காமல் ஒரு அற்புதமான காட்சி வளைவை ஏற்படுத்துகிறது. நாசாவின் கூற்றுப்படி காலை 9.13 மணிக்கு நெருப்பு வளைய சூரிய கிரகணம் தொடங்கும். அமெரிக்கா, மெக்சிகோ, கலிபோர்னியா, லேவாடா ஆகிய நாடுகளில் வசிக்கும் மக்கள் இந்த நெருப்புகளையும் சூரிய கிரகணத்தை பார்க்கலாம்.
இந்த நிகழ்வின் போது சூரியனை நேரடியாக பார்க்கக் கூடாது. இந்த நிகழ்வை நாசாவின் இணையதளத்தில் உலகில் உள்ள அனைத்து மக்களும் பார்க்கலாம். இந்தியாவில் வசிப்பவர்கள் இந்த கிரகணத்தை நேரில் பார்க்க இயலாது.