ஐயோ காப்பாத்துங்க…. திடீர் வெள்ளம்… ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட சாப்ட்வேர் எஞ்சினியர்கள்… ஒருவரைத் தேடும் பணி… 5 பேர் உயிருடன் மீட்பு… போலவரத்தில் பதறவைக்கும் சம்பவம்…!

By Swetha on புரட்டாதி 16, 2026

Spread the love

போலவரம் மாவட்டம் சிந்துறு மண்டலம் சொகிலேரு வியூ பாயிண்ட் அருகே, ஹைதராபாத்தில் மென்பொருள் பொறியாளராகப் பணியாற்றி வரும் ஆறு இளைஞர்கள் குளிப்பதற்காக ஆற்றில் இறங்கியுள்ளனர். இவர்கள் அனைவரும் முன்னதாக அரக்கு, வஞ்சங்கி மற்றும் மாரேடுமில்லி ஆகிய சுற்றுலாத் தலங்களைப் பார்வையிட்டுவிட்டு, இறுதியாக சொகிலேரு பகுதிக்கு வந்துள்ளனர்.

அப்போது எதிர்பாராதவிதமாக ஆற்றில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், குளித்துக் கொண்டிருந்த ஆறு பேரும் நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். அங்கு விரைந்த அதிகாரிகள் உடனடியாகச் செயல்பட்டு ஐந்து பேரை பத்திரமாக மீட்டனர்.

   

எனினும், விஜயவாடாவைச் சேர்ந்த 26 வயதான மென்பொருள் பொறியாளர் கொஸ்துரி நிலேஷ் என்பவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார். காணாமல் போன நிலேஷைத் தேடும் பணியில் வனத்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் உள்ளூர் மக்களின் உதவியோடு தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இச்சம்பவம் நிலேஷின் குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.