அடியாத்தி… வானத்தில் இருந்து கொத்தாக விழுந்த பனிப்பந்துகள்… சின்னாபின்னமான கார் கண்ணாடி… பாராகுவேயை உலுக்கிய கோரத் தாண்டவம்… இணையத்தில் வீடியோ வைரல்…!!

By Swetha on ஐப்பசி 4, 2026

Spread the love

பாராகுவே நாட்டின் தலைநகரான அசுன்சியோன் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் அக்டோபர் 3 அன்று வீசிய சக்திவாய்ந்த புயலால் பயங்கர ஆலங்கட்டி மழை பெய்தது. விண்ணில் இருந்து விழுந்த பெரிய அளவிலான பனிக்கட்டிகள் தலைநகரின் பல இடங்களில் பெரும் சேதத்தை ஏற்படுத்தின.

இந்த புயலின் போது பலத்த காற்றுடன் கனமழையும் பெய்த நிலையில், சில இடங்களில் டென்னிஸ் பந்து அளவில் ஆலங்கட்டி மழை பொழிந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் அப்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களின் கண்ணாடிகள் உடைந்தும், உடல்கள் நசுங்கியும் கடுமையாகச் சேதமடைந்தன.

   

https://twitter.com/CNNnews18/status/2106655356135030915/video/1

   

மேலும், வீடுகளின் கூரைகள் மற்றும் ஜன்னல்களும் இந்த ஆலங்கட்டி மழையால் பலத்த சேதத்திற்கு உள்ளாகின. சில இடங்களில் மின்சார விநியோகம் முற்றிலுமாகத் துண்டிக்கப்பட்டு, பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.