Categories: சினிமா

பாட்டுல சொன்னா மட்டும் திருந்திடுவீங்களா.. அது மாதிரி ஆச்சாரமான பாட்டு எதுவுமே இல்ல.. கவிஞர் சினேகன் ஓபன் டாக்..!

Spread the love

தமிழ் சினிமாவை பொறுத்தவரையில் தவிர்க்க இயலாத பாடல் ஆசிரியர்களின் ஒருவர்தான் சினேகன். தற்போது உலகநாயகன் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் உறுப்பினராக அவர் பணியாற்றி வந்தாலும் தமிழ் சினிமாவில் பலராலும் மறக்க முடியாத பல நல்ல பாடல்களை கொடுத்துள்ளார். திருச்செல்வம் என்ற பெயரோடு சென்னைக்கு வந்த இவர் வைரமுத்துவிடம் தான் பல ஆண்டுகளாக பணியாற்றினார். அப்போதுதான் சினேகன் என்று பெயர் மாற்றம் செய்து கொண்டார். கடந்த 1997 ஆம் ஆண்டு வெளியான புத்தம் புது பூவே என்ற திரைப்படம் மூலம் கடந்த 1997 ஆம் ஆண்டு பாடல் ஆசிரியராக தமிழ் திரை உலகில் அறிமுகமானார்.

2001 ஆம் ஆண்டு பிரபல இயக்குனர் சேரன் இயக்கத்தில் வெளியான பாண்டவர் பூமி என்ற திரைப்படம் மூலம் தான் பாடலாசிரியர் சினேகனுக்கு மிகப்பெரிய வெற்றி கிடைத்தது. அந்தப் படத்தில் அவரவர் வாழ்க்கையில், அழகான தடுமாற்றம், சின்ன வயசுல, தோழா தோழா கனவு தோழா மற்றும் தாயே உன்னையே ஆகிய ஐந்து பாடல்களையும் எழுதியது சினேகன் தான். தொடர்ந்து தமிழ் திரை உலகில் சிறந்த பாடல் ஆசிரியராகவும் நடிகராகவும் பணியாற்றி வரும் சினேகன் கடந்த 2021 ஆம் ஆண்டு கொரோனா காலகட்டத்தில் திருமணம் செய்து கொண்டார். சின்னத்திரையில் பிரபலமான நாடகங்களில் நடித்து புகழ்பெற்ற நடிகை கன்னிகா ரவியை சினேகன் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு ஊரே வியக்கும் அளவுக்கு இருவரும் ஒன்றாக சேர்ந்து வாழ்ந்து வந்தனர். இந்த தம்பதிகளுக்கு சமீபத்தில் தான் இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தது.

இந்நிலையில் கவிஞர் சினேகன் 2003 ஆம் ஆண்டு விக்ரம் நடிப்பில் வெளியான சாமி படத்தில் இடம் பெற்ற கல்யாணம்தான் கட்டிக்கிட்டு ஓடிப்போலாமா என்ற பாடலை எழுதியிருந்தார். அந்தப் பாடல் குறித்து சமீபத்தில் அளித்த பேட்டியில் அவர் பேசியுள்ளார். அதில், கல்யாணம் தான் கட்டிக்கிட்டு ஓடிப்போலாமா பாட்டைப் போல ஒரு சைவமான பாட்டு எதுவுமே கிடையாது. இவள் ஒரு ஆச்சாரமாக பிறந்த பெண். அந்தப் பாட்டில் அவன் அசைவமாக கேட்டுக் கொண்டிருப்பான். ஆனால் இவள் சைவமாக பதிலளித்துக் கொண்டிருப்பார்.

தன்னுடைய ஆச்சாரத்தில் இருந்து தவறாத அந்த பெண் தன் ஆச்சாரத்திலிருந்து வெளிவரக்கூடிய ஒவ்வொரு உணவுகளையும் அவனுக்கு சொல்லிக் கொண்டே இருப்பாள். அதே மாதிரி அந்தப் பாடலில் ஓடிப்போலாமா கட்டிக்கலாமா என்று கேள்வி தான் கேட்டேன். எந்த இடத்திலும் ஓடிப் போங்க கட்டிக்கோங்க என்று நான் சொல்லவே இல்ல. அப்படியே நான் சொன்னதாக இருந்தாலும் கண்ணதாசன் அழுது அழுது இந்த சமூகத்திற்கு சொன்ன கருத்துக்களை எல்லாம் நீங்கள் கேட்டீங்களா. அப்படியே பாட்டில் சொல்வதை எல்லாமே நீங்க கேட்ருவீங்களா திருந்திருவீங்களா என சினேகன் பேசியுள்ளார்.

Nanthini

Recent Posts

இரத்தக் களரியான இலங்கை சிறைச்சாலை… தடுத்த போலீசாருக்கு நேர்ந்த கொடூரம்… போர்க்களமாக மாறிய நீர்கொழும்பு ஜெயில்…!

இலங்கையின் தலைநகர் கொழும்பிற்கு வடக்கே அமைந்துள்ள நீர்கொழும்பு சிறைச்சாலை, கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் ஒரு போர்க்களமாக மாறியுள்ளது. சிறைக்குள் இருக்கும்…

5 மணத்தியாலங்கள் ago

அயோத்தி ராமர் கோயில் விவகாரம்… டெலிட் செய்யப்பட்ட வீடியோவில் சிக்கிய ஆதாரம்… அம்பலமான அதிர்ச்சி உண்மை…!

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் அமைந்துள்ள புகழ்பெற்ற ராமர் கோயிலில், பக்தர்களின் காணிக்கை பணத்தில் பெரும் முறைகேடு மற்றும் திருட்டு…

6 மணத்தியாலங்கள் ago

திடீரென அணைந்த விளக்குகள்… காட்டுமன்னார்கோவில் அரசு மாளிகையில் நள்ளிரவில் நடந்த அதிர்ச்சி… காரில் தவித்த சௌமியா அன்புமணி… என்ன நடந்தது…?

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் பகுதியில் பாமக சட்டமன்ற உறுப்பினர் சௌமியா அன்புமணிக்கு நேர்ந்த மின்தடை சம்பவம், தமிழக அரசியல் வட்டாரத்தில்…

6 மணத்தியாலங்கள் ago

பயங்கர வெள்ளத்தில் சிக்கிய சொகுசு கார்கள், புல்டோசர்கள்… காஷ்மீரில் விடிய விடிய நடந்த கோரத்தாண்டவம்… நடுங்க வைக்கும் வீடியோ…!

ஜம்மு-காஷ்மீரின் டோடா மற்றும் கிஷ்த்வார் மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பெரும் சேதம் விளைவித்துள்ளது. இதனால்…

6 மணத்தியாலங்கள் ago

இன்ஸ்டா கள்ளக்காதல் விபரீதம்… ஆண் நண்பர்களுக்கு நிர்வாண… வீடியோ அனுப்பிய மனைவி… காட்டுக்குள் வீசிவிட்டு தப்பிய கணவர் அதிரடி கைது…!!

கோயம்புத்தூர்-பாலக்காடு சாலையில் உள்ள மஞ்சப்பள்ளம் காட்டுப்பகுதியில் 25 வயதான பர்ஷா என்ற இளம்பெண் படுகொலை செய்யப்பட்டு, நிர்வாண நிலையில் சடலமாகக்…

6 மணத்தியாலங்கள் ago