ரசாயன தொட்டியில் மயங்கி விழுந்த பாம்பு… உடனே நபர் செய்த ‘அந்த’ விஷயம்…. இணையத்தை அலற விடும் ஷாக்கிங் வீடியோ….!

By Nanthini on புரட்டாதி 21, 2026

Spread the love

மனித உயிர்களைக் காப்பாற்ற அளிக்கப்படும் ‘சி.பி.ஆர்’ முதலுதவி சிகிச்சையை ஒரு பாம்பிற்கு அளித்து, அதன் உயிரை மீட்ட சம்பவம் கேட்போரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. குஜராத் மாநிலத்தில் நடைபெற்ற இந்த விசித்திரமான மற்றும் நெகிழ்ச்சியான நிகழ்வின் வீடியோ, தற்போது சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீ போல பரவி இணையவாசிகளின் பெருத்த கவனத்தை ஈர்த்து வருகிறது.

குஜராத் மாநிலம் வாப்பியில் உள்ள ஒரு தொழிற்பேட்டையில், ஆபத்தான ரசாயனம் கலந்த நீர் தொட்டிக்குள் சுமார் 5 அடி நீளமுள்ள பாம்பு ஒன்று தவறி விழுந்தது. ரசாயன நீரின் வீரியத்தால் மூச்சுத்திணறி மயக்கமடைந்த அந்தப் பாம்பைக் கண்ட ஊழியர்கள், உடனடியாக விலங்கு நலத் தன்னார்வலருக்குத் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த அவர், பாம்பை மீட்டு அதன் வாய் வழியே காற்றைச் செலுத்தியும், நெஞ்சுப் பகுதியில் மிதமான அழுத்தம் கொடுத்தும் சுமார் இரண்டு நிமிடங்கள் தொடர்ச்சியாக சி.பி.ஆர் சிகிச்சை அளித்தார். அதோடு, பாம்பின் உடலில் படிந்திருந்த நச்சு ரசாயனங்களை அகற்ற அதன் மீது சுத்தமான நீரையும் ஊற்றிக் கழுவினார்.

   

அந்தத் தன்னார்வலரின் இடைவிடாத முயற்சியின் பலனாக, சிறிது நேரத்திலேயே அந்தப் பாம்பு மெதுவாகச் சுயநினைவு பெற்று இயல்பு நிலைக்குத் திரும்பியது. ஆபத்தான ஒரு ஊர்வன உயிரினத்தைக் காப்பாற்ற அஞ்சாமல், துணிச்சலுடனும் கருணையுடனும் செயல்பட்ட அந்த நபரின் மனிதநேயத்தைப் பலரும் பாராட்டி வருகின்றனர். பாம்புகளுக்கும் இது போன்ற முதலுதவி சிகிச்சை அளித்துக் காப்பாற்ற முடியும் என்பதை உணர்த்திய இந்த அபூர்வக் காட்சி, இணையத்தில் பெரும் வியப்பையும் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.