இப்படிகூடவா நடக்கும்?… பாம்பை கடித்தே கொன்ற 1 வயது குழந்தை… பயங்கர அதிர்ச்சி சம்பவம்…!

By Nanthini on ஆடி 27, 2025

Spread the love

பீகார் மாநிலத்தில் குழந்தை கடித்து பாம்பு உயிர் இழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பீகார் மாநிலம் பெட்டையா கிராமத்தில் மாதேஸ்வரி தேவி என்பவர் வசித்து வரும் நிலையில் இவருக்கு ஒரு வயதில் கோவிந்தா என்ற மகன் உள்ளார். சமையல் செய்வதற்கு அடுப்பில் எரிக்க தேவையான குச்சிகளை எடுக்க தேவி வனப்பகுதிக்கு சென்று விட்ட நிலையில் வீட்டில் கோவிந்தாவின் பாட்டு இருந்துள்ளார். குழந்தையை பாதுகாப்பாக விட்டு விட்டு தேவி சென்ற நிலையில் அப்போது நாகப்பாம்பு ஒன்று ஊர்ந்து வீட்டுக்குள் வந்துள்ளது.

குழந்தையை பார்த்ததும் அதனை நெருகிச் சென்ற நிலையில் குழந்தைக்கு அது என்னவென்று தெரியவில்லை. பொம்மை என்று நினைத்து அமைதியாக இருந்து விட்டது. ஒரு கட்டத்தில் குழந்தை கையில் பாம்பு கொடி போல் சுற்றி கொண்ட நிலையில் அது விரைவாக நெளிந்து நெளிந்து சென்றதில் குழந்தைக்கு ஏதோ தோன்றியுள்ளது. அதனை விளையாட்டுப் பொருளாக கையில் எடுத்து அந்தப் பாம்பின் உடலில் பற்களால் கடித்து வைத்துள்ளது. இதனால் அந்த பாம்பு உடனே இறந்து விட்டது. பிறகு குழந்தையின் சுயநினைவற்று கீழே விழுந்த நிலையில் உடனே மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

   

குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் பாம்பு குழந்தையை கிடைக்கவில்லை அதன் விஷம் எதுவும் குழந்தையின் உடலில் இல்லை என்று கூறியுள்ளனர். நாகப்பாம்பு மனிதனை கடித்து விட்டால் அதன் விஷம் சில மணி நேரங்களில் ஏறி கடித்த நபரை கொன்று விடும். ஆனால் ஒரு வயது குழந்தையிடம் அது விளையாட்டாக எதுவும் செய்யாமல் இருந்துள்ளது. இருந்தாலும் குழந்தை கிடைத்ததில் பாம்பு உயிர் இழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.