மத்திய பிரதேசம் மாநிலம் குணால் மாவட்டத்தைச் சேர்ந்தவர் தீபக் மஹாபார். 42 வயதான இவர் பாம்பு பிடி வீரர். அந்த பகுதியில் உள்ள பல்வேறு பாம்புகளை பிடித்து அனுபவம் உள்ளவர். இந்த நிலையில் பர்பத்புரா கிராமத்தில் கொடிய விஷமுள்ள பாம்பு ஒன்று பதுங்கி இருப்பதாகவும் அதை பிடிக்குமாறும் அவருக்கு அழைப்பு வந்தது. இதனையடுத்து அங்கு சென்று அவர் அந்த பாம்பு லாவகமாக பிடித்தார். அப்போது பள்ளியில் படிக்கும் அவருடைய மகனை அழைத்து வருமாறு அவருக்கு வீட்டில் இருந்து போன் வந்துள்ளது .
இதனை அடுத்து கொடிய விஷமுள்ள அந்த பாம்பை அவர் தன்னுடைய கழுத்தில் போட்டுக்கொண்டு மோட்டார் சைக்கிளில் மகன் படிக்கும் பள்ளிக்கூடத்திற்கு சென்றார். வழியில் தன்னுடைய கழுத்தில் பாம்பு கிடப்பதை செல்போனில் வீடியோ எடுத்தும் ரீல்ஸ் வெளியிட்டார். கழுத்தில் பாம்போடு மகனை அழைத்துக்கொண்டு வரும் வழியில் தீபக் கையில் அந்த பாம்பு கடித்து உடல் முழுவதும் விஷம் ஏறியுள்ளது. இதனை அடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே பதற்றம் அதிகரித்து வரும் சூழலில், ஹார்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் அமெரிக்கப் போர்க்கப்பல்களைத் தாக்க…
கர்நாடக மாநிலம் விஜயப்புராவில் மூன்று வயது சிறுவன் ஒருவன் தெருநாயால் மிகக் கொடூரமாகத் தாக்கப்பட்டு, சுமார் 30 மீட்டர் தூரம்…
வெனிஸ் பைனாலே 2026 (Venice Biennale 2026) கலைக் கண்காட்சியில், கடல் மட்டம் உயர்ந்து வருவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த…
மத்தியப் பிரதேச மாநிலம் ஜாபுவாவில் நிகழ்ந்த ஒரு சாலை விபத்தின் போது, கார் ஓட்டுநரின் துரிதமான செயல்பாட்டால் இருவர் உயிர்…
தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய், முதலமைச்சராகப் பதவியேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தவெக இதுவரை சட்டப்பேரவையில்…
சிதம்பரம் தொகுதியில் திமுக கூட்டணியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு 5,747 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மனிதநேய ஜனநாயக கட்சியின்…