“அப்பாவைக் காணோம்”…. சட்டசபையில் விஜய் போட்ட ஒரே போடு… முகம் சிவந்த உதயநிதி.. அரங்கேறிய பழிவாங்கும் படலம்… அதுக்குன்னு இப்படியா…?

By Nanthini on ஆவணி 13, 2026

Spread the love

தமிழகச் சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜய் அவைக்குள் நுழைந்தபோது, மற்ற உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று மரியாதை செலுத்திய நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது இருக்கையிலேயே அமர்ந்திருந்த நிகழ்வு பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. பொதுவாக, அவைக்குள் தலைவர்கள் வரும்போது எழுந்து நின்று வணக்கம் தெரிவிப்பது நீண்டகால சட்டமன்ற மரபாகும். ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி, மு.க.ஸ்டாலின் ஆகியோரின் ஆட்சிக்காலங்களிலும், தவெக ஆட்சியின் தொடக்கத்திலும் இந்த நாகரிகப் பழக்கம் தொடர்ந்தது. ஆனால், தற்போதைய பட்ஜெட் கூட்டத்தொடரில் இந்தச் சூழல் முற்றிலும் தலைகீழாக மாறி, அரசியல் வட்டாரத்தில் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த கசப்பான சூழலுக்குக் கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்பாக உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்ட சம்பவமே முக்கியக் காரணமாகப் பார்க்கப்படுகிறது. திமுக தரப்பில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்திய இச்சம்பவத்தின் தாக்கம் நேரடியாகவே சட்டமன்றத்திற்குள்ளும் எதிரொலித்தது. முதலமைச்சர் விஜய் புன்முறுவலுடன் அவையின் மையப்பகுதி வரை வந்து அனைவரையும் வணங்கியபோதும், கே.என்.நேருவைத் தவிர வேறு எந்த திமுக உறுப்பினரும் எழுந்து நிற்கவில்லை. உதயநிதி ஸ்டாலினும் தனது பார்வையைத் தவிர்த்து வேறு பக்கம் திரும்பிக்கொண்டார். தனிப்பட்ட மற்றும் அரசியல் ரீதியான இந்த விலகல் அவையின் விவாதங்களிலும் எதிரொலிக்கத் தொடங்கியது.

   

குறிப்பாக, சட்டமன்றத்தில் நடைபெற்ற இரண்டு முக்கிய நிகழ்வுகள் இந்த மோதலை மேலும் தீவிரமாக்கியுள்ளன. விவாதத்தின் போது முதலமைச்சர் விஜய் “அப்பாவைக் காணோம்” என்று மறைமுகமாகப் பேசியதும், அதைத் தொடர்ந்து வேளாண் பட்ஜெட் விவாதத்தில் உதயநிதி எழுப்பிய கேள்விகளுக்கு, “ஆவணங்களையும் செய்தித்தாள்களையும் சரியாகப் படித்துப் பார்க்க வேண்டும்” எனப் பதிலடி கொடுத்ததும் இரு தரப்பிற்கும் இடையிலான இடைவெளியை அதிகப்படுத்தின. அவைக்குள் நடைபெற்ற இந்த காரசாரமான உரையாடல்களும், தனிப்பட்ட விமரிசனங்களுமே தற்போதைய முரண்பட்ட சூழலுக்கு முக்கியக் காரணியாக அமைந்துள்ளன.

   

அரசியல் களத்தில் கொள்கை ரீதியான முரண்பாடுகளும் விமர்சனங்களும் இருப்பது இயல்பானதுதான்; ஆனால், சட்டமன்றத்திற்குள் தனிப்பட்ட வெறுப்பை வெளிப்படுத்துவது ஜனநாயக மரபுகளுக்கு அழகல்ல என்று மூத்த அரசியல் விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். முதலமைச்சர் பதவி என்பது ஒரு தனிநபருக்கோ அல்லது குறிப்பிட்ட கட்சிக்கோ சொந்தமானதல்ல, அது மக்களின் ஜனநாயகத் தீர்ப்பினால் உருவான அரசியலமைப்பு பொறுப்பாகும். அரசியல் எதிர்ப்பை அவையின் ஆரோக்கியமான விவாதங்களில் வெளிப்படுத்த வேண்டுமே தவிர, அடிப்படை மரியாதையைத் தவிர்க்கும் செயல்பாடுகள் சட்டமன்றத்தின் கண்ணியத்தைக் குறைத்துவிடும் என்பதே பெரும்பாலோோரின் கருத்தாக உள்ளது.